பிழைப்புக்காக மத்திய கிழக்கு நாடுகளில் தஞ்சமடைந்தவர்... இன்று அவரது சொத்து மதிப்பு ரூ.36,700 கோடி
ஜாய் ஆலுக்காஸ் குழுமத்தின் தலைவர் ஜாய் ஆலுக்காஸ் ஃபோர்ப்ஸ் வெளியிட்ட 100 பணக்கார இந்தியர்கள் பட்டியலில் ஒருவராக தெரிவாகியுள்ளார்.
சொத்து மத்திப்பு ரூ.36,700 கோடி
இந்தியாவில் மட்டுமின்றி, உலகின் பல நாடுகளில் நகை விற்பனையில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக திகழும் ஜாய் ஆலுக்காஸ் குழுமத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக செயல்பட்டு வருகிறார் ஜாய் ஆலுக்காஸ்.
சொத்து மதிப்பின் அடிப்படையில் எஞ்சிய நகைக்கடை உரிமையாளர்கள் அனைவரையும் சமீப ஆண்டுகளில் ஜாய் ஆலுக்காஸ் பின்னுக்கு தள்ளியுள்ளார். இவரது மொத்த சொத்து மத்திப்பு என்பது ரூ.36,700 கோடி என்றே கூறப்படுகிறது.
இந்திய செல்வந்தர்கள் வரிசையில் 69வது இடத்தில் இருந்து தற்போது 50வது இடத்தை எட்டியுள்ளார். ஜாய் ஆலுக்காஸின் தந்தை வர்கீஸ் ஆலுக்காஸ் கடந்த 1956ல் குடும்பத்தின் முதல் நகைக்கடையை கேரளாவின் திருச்சூர் பகுதியில் திறந்துள்ளார்.
ஆனால் 2007ல் உலககிலேயே மிகப் பெரிய தங்கம் மற்றும் வைர நகைகளுக்கான கடை ஒன்றை சென்னையில் திறந்துள்ளார் ஜாய் ஆலுக்காஸ். பள்ளிப்படிப்பை பாதியில் கைவிட்ட ஜாய் ஆலுக்காஸ், பிழைப்புக்காக மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்றுள்ளார்.
இந்தியாவில் மட்டும் 100 கடைகள்
கடின உழைப்பாழியான ஜாய் ஆலுக்காஸ் 1987ல் தமது குடும்பத்தினர் சார்பில் முதல் நகைக்கடையை ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபி மாகாணத்தில் திறந்துள்ளார். ஆனால் குடும்ப பிரச்சனை காரணமாக தனியாக தொழில் தொடங்கிய ஜாய் ஆலுக்காஸ் இந்தியாவில் மட்டும் 100 கடைகளையும் வெளிநாடுகளில் 60 கடைகளையும் திறந்துள்ளார்.
மொத்தம் 9,000 பேர்கள் இவரது கடைகளில் பணியாற்றுகின்றனர். 2023ல் இதுவரை ஜாய் ஆலுக்காஸ் குழுமத்தில் ரூ.14,513 கோடி அளவுக்கு நகை விற்பனை நடந்துள்ளதாகவும், இந்தியாவில் மட்டும் இதுவரை வருவாயாக ரூ.899 கோடி ஈட்டியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும், இந்தியாவில் கடைகளின் எண்ணிக்கையை 130 என அதிகரிக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவே கூறுகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |