30 ரூபாய் கூலிக்கு வேலை பார்த்த நபர்... இன்று ரூ 17,000 கோடி நிறுவனத்திற்கு உரிமையாளர்
குடும்ப சூழல் காரணமாக 14 வயதிலேயே படிப்பை நிறுத்தி, நாள் ஒன்றிற்கு 30 ரூபாய் கூலிக்கு வேலை பார்த்த நபர் இன்று ரூ 17,000 கோடி நிறுவனத்திற்கு உரிமையாளராக உயர்ந்துள்ளார்.
பொருளாதார நெருக்கடி
இந்தியாவின் பஞ்சாப் மாகாணத்தை சேர்ந்தவர் Rajinder Gupta. பரம்பரையாக பருத்தி வியாபாரிகளின் குடும்பம். ஆனால் பொருளாதார நெருக்கடியில் சிக்கியதை அடுத்து, 14 வயதேயான ராஜீந்தர் குப்தா படிப்பை கைவிடும் நிலைக்கு தள்ளப்பட்டார்.
அத்துடன், நாளுக்கு ரூ 30 கூலிக்கு சின்னச் சின்ன வேலைகளில் ஈடுபடத் தொடங்கினார். பல ஆண்டுகள் போராட்டத்திற்கு பிறகு, 1985ல் அபிஷேக் இண்டஸ்ட்ரீஸ் என்ற பெயரில் உர தொழிற்சாலை ஒன்றை நிறுவியுள்ளார்.
தொடர்ந்து 1991ல் இன்னொரு நிறுவனத்தையும் தொடங்கினார். இதுவே பின்னாளில் அவருக்கு அதிக லாபத்தையும் வாய்ப்புகளையும் உருவாக்கித் தந்துள்ளது. படிப்படியாக ஜவுளி, காகிதம் மற்றும் இரசாயனத் தொழில்களில் குப்தா களமிறங்கினார்.
சொத்து மதிப்பு ரூ 12,368 கோடி
மட்டுமின்றி, பஞ்சாப் மற்றும் மத்தியப்பிரதேசத்தில் தமது நிறுவனங்களில் பல கிளைகளையும் நிறுவினார். அது பின்னர் Trident குழுமமாக உருமாறியது. பல ஆண்டுகள் கடும் உழைப்பைக் கொட்டிய குப்தா தமது 64வது வயதில், கடந்த 2022 ஆம் ஆண்டு தனிப்பட்ட காரணங்களுக்காக இயக்குனர் குழுவில் இருந்து விலகினார்.
இருப்பினும் Trident Limited நிறுவனத்திற்கு தற்போதும் தலைவராக செயல்பட்டு வருகிறார். 2007ல் பத்மஸ்ரீ விருது பெற்ற ராஜீந்தர் குப்தாவின் தற்போதைய சொத்து மதிப்பு என்பது ரூ 12,368 கோடி என்றே கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |