துப்பாக்கி தோட்டாக்களுடன் சிறைக்குள் நுழைய முயன்ற பள்ளிச் சிறுமி: விசாரணையின் கூறிய காரணம்
துப்பாக்கி தோட்டாக்களுடன் சிறைக்குள் அத்துமீறி நுழைய முயன்ற பள்ளிச் சிறுமியை பொலிஸார் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
சிறைக்குள் அத்துமீறி நுழைந்த பெண்
உத்தர பிரதேச மாநிலம் கோண்டா மாவட்டத்தில் உள்ள கிளைச் சிறைக்குள் வியாழக்கிழமை போலி அடையாள அட்டை காண்பித்து சிறைக் கைதி ஒருவரை பள்ளி மாணவி ஒருவர் சந்திக்க சென்ற நிலையில் பாதுகாப்பு பணியாளர்கள் அவரை தடுத்து நிறுத்தினர்.
மேலும் அவரிடம் நடத்தப்பட்ட சோதனையின் போது பயன்படுத்தாத துப்பாக்கித் தோட்டாக்கள் மற்றும் பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக சிறைக் காவலர் அஃப்தாப் ஆலம் அன்சாரி வழங்கிய தகவலில், சிறுமியும் அவருடன் வந்த ஆண் ஒருவரும் இணைந்து சிறையில் இருந்த ஹர்ஷு காஷ்யப் என்ற கைதியை சந்திக்க வந்தது தெரியவந்துள்ளது.
முதன்மை நுழைவாயிலில் நடத்தப்பட்ட வழக்கமான சோதனையின் போது, அடையாள அட்டையில் இருந்த விவரங்களுக்கு மாறான தகவல்களை இருவரும் கூறிய நிலையில் நிலைமை தீவிரமடைந்துள்ளது.

இதையடுத்து அவர்களிடம் உடல் பரிசோதனை நடத்தப்பட்ட போது, அவரின் பாக்கெட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 10 தோட்டாக்களை கண்டுபிடித்தனர்.
இதையடுத்து சிறைக் காவல் நிலைய பொறுப்பாளருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதோடு, இருவரும் உள்ளூர் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
விசாரணையில் கூறப்பட்ட தகவல்
கண்டறியப்பட்ட 10 துப்பாக்கிகளும் சிறுமியின் தந்தையுடைய உரிமம் பெற்ற துப்பாக்கிக்கு சொந்தமானது என்று அந்த சிறுமி பொலிஸார் விசாரணையில் தெரிவித்துள்ளார்.
மேலும் சிறையில் உள்ள தன்னுடைய நண்பரை சந்திக்க சென்றது தன்னுடைய தந்தைக்கு தெரிந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கக் கூடும் என்ற பயத்தினால் அதனை தன்னுடன் எடுத்து வந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் தொடர் விசாரணையை நடத்தி வருகின்றனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |