தமிழகத்தில் இன்று பள்ளிகள் திறப்பு
அரையாண்டு தேர்வு முடிந்து மாணவர்களுக்கு விடுமுறை விட்ட நிலையில், தமிழகத்திலுள்ள மாநிலத்தின் பாடத்திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும்படும் அனைத்து பள்ளிகளும் இன்று(ஜனவரி 2, 2024) திறக்கப்பட்டது.
அரையாண்டு மற்றும் இரண்டாம் பருவத்தேர்வுகள் கடந்த டிச-13 முதல் டிச-22 ஆம் தேதி வரை நடத்தப்பட்டு விடுமுறை விடப்பட்டது.
ஒரே வினாத்தாள் முறையில் நிகழாண்டு தேர்வு நடத்தி முடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து டிச-23 முதல் ஜனவரி- 1 முதல் விடுமுறை விடப்பட்டது.
பெருமழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களான தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் தள்ளிவைக்கப்பட்ட அரையாண்டு தேர்வுகளானது விடுமுறைக்குப்பின் நடத்தப்படும் என்று பள்ளி கல்வித்துறை அறிவித்தது.
ஜனவரி -2 பள்ளிகளானது திறக்கப்பட உள்ளதால் திங்கள்கிழமையான ஜனவரி-1 அன்று பள்ளி திறப்புகளான முன்னேற்பாடுகளை மாவட்ட வாரியாக கல்வி துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
சென்னை வேளச்சேரியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக்கல்வி துறை அமைச்சரான அன்பில் மகேஷ் அவர்கள் திடீர் ஆய்வு மேற்க்கொண்டு தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் முன்னேற்பாடுகள் பற்றி கேட்டறிந்தார்.
மழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களான திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடியில் ஜனவரி-11 ஆம் தேதிக்குள் தள்ளிவைக்கப்பட்ட தேர்வுகளை நடத்தி முடிக்கவும் அதுமட்டுமின்றி மூன்றாம் பருவத்திற்கு தேவையான பாடநூல்கள், சீருடைகள் உள்ளிட்ட பொருட்களை 1 முதல் 7 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளதாக துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.