கனடா துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பொலிசார் வெளியிட்ட திடுக்கிடும் பின்னணி
கனடா பாடசாலை ஒன்றில் துப்பாக்கியால் சுட்டு 6 பேர்களை கொலை செய்தவர், சொந்த தாயார் மற்றும் சகோதரரையும் படுகொலை செய்துள்ளதை பொலிசார் வெளிப்படுத்தியுள்ளனர்.
குடும்ப உறுப்பினர்கள்
குறித்த குற்றவாளி பெண் என பொலிஸ் தரப்பில் குறிப்பிடப்பட்டது தற்போது கனடாவில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. 18 வயதான Jesse Van Rootselaar என்பவர் பாலின மாற்றம் செய்துகொண்டவர் என்றே தெரிய வந்துள்ளது.

பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் டம்ளர் ரிட்ஜ் மேல்நிலைப் பள்ளியில் நடந்த இந்த தாக்குதல் சம்பவம், கனடாவில் பள்ளிகளில் நடந்த இரண்டாவது மிக மோசமான துப்பாக்கிச் சூடு சம்பவமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
பாடசாலையில் ஆறு பேரைக் கொன்ற Rootselaar, அவரது சொந்த குடும்ப உறுப்பினர்கள் இருவரையும் கொன்றதாக பொலிசார் உறுதி செய்துள்ளனர்.
பின்னர், தன்னைத்தானே சுட்டு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். Van Rootselaar என்பவர் கடந்த 6 வருடங்களாக தம்மை ஒரு பெண் என்றே அடையாளப்படுத்தி வருவதாக பொலிசார் குறிப்பிட்டுள்ளனர்.
அதனாலையே, தாக்குதலில் ஈடுபட்டவர் பெண் என அறிவித்துள்ளதாகவும் விளக்கமளித்துள்ளனர். மேலும், செவ்வாய்க்கிழமை மதியம் மேல்நிலைப் பள்ளியில் துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு முன்பு, வான் ரூட்ஸீலார் தனது தாயார் ஜெனிஃபர் மற்றும் சகோதரர் எம்மெட்டை அவர்களது வீட்டில் வைத்தே துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மனநலம் தொடர்பாக
மட்டுமின்றி, அவரது மனநலம் தொடர்பாக பல ஆண்டுகளாக அவரது வீட்டிற்கு சென்று விசாரணை முன்னெடுத்து வந்த அதிகாரிகளுக்கு அவர் நன்கு தெரிந்தவராக இருந்தார்.

அவர் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது 14 வயதில் இருந்தே பள்ளிக்குச் செல்வதை நிறுத்திவிட்டார். மட்டுமின்றி, தோராயமாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அவரது வீட்டில் இருந்து குற்றவியல் சட்டத்தின் கீழ் துப்பாக்கிகளை பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.
செவ்வாய்க்கிழமை நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 25 பேர்கள் காயங்களுடன் தப்பியுள்ளனர் என்றே பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |