பாடசாலைக்குள் புகுந்து வெறிச்செயல்... ஆசிரியர்கள் உட்பட பலரது உயிரைப்பறித்த மாணவன்
அமெரிக்காவில் பாடசாலை ஒன்றில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் தொடர்புடைய நபரின் பெயர் உள்ளிட்ட தகவல் வெளியாகியுள்ளது.
14 வயது சிறுவன்
அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் உயர்நிலைப் பள்ளி ஒன்றில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் நால்வர் கொல்லப்பட்டுள்ளதுடன் 9 பேர்கள் காயங்களுடன் தப்பியுள்ளனர்.
இந்த விவகாரத்தில் தற்போது 14 வயது சிறுவன் பொலிசாரிடம் சரணடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. Colt Gray என்ற அந்த சிறுவன் பட்டப்பகலில் Apalachee உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் துப்பாக்கியுடன் நுழைந்து தாக்குதலை முன்னெடுத்துள்ளான்.
பகல் 9 மணிக்கு நடந்த இச்சம்பவத்தை அடுத்து, 10.30 மணியளவில் நகரின் மொத்த பொலிசரும், தொடர்புடைய அமைப்புகளும் பாடசாலை வளாகத்தில் திரண்டனர். மட்டுமின்றி, நூற்றுக்கணக்கான மாணவர்கள் பாதுகாப்பு கருதி அருகே அமைந்துள்ள கால்பந்து அரங்கத்திற்கு மாற்றியுள்ளனர்.
பொலிஸ் தரப்பில்
வெளியான தகவலின் அடிப்படையில், இரு மாணவர்களும் இரு ஆசிரியர்களும் துப்பாக்கி குண்டு பாய்ந்து கொல்லப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
நடந்த சம்பவம் தொடர்பில் ஜனாதிபதி ஜோ பைடனுக்கும் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பாதிக்கப்பட்டவர்களின் தகவல் ஏதும் பொலிஸ் தரப்பில் இருந்து வெளியிடப்படவில்லை. பாரோ கவுண்டி ஷெரிப் அலுவலகம் தற்போது விசாரணையை முன்னெடுத்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |