தமிழக பள்ளியில் மேற்கூரை இடிந்து விழுந்து ஊழியர் காயம்! அரசுக்கு அண்ணாமலை கேட்ட கேள்வி
தமிழக மாவட்டம், கடலூரில் உள்ள துவக்கப்பள்ளி ஒன்றின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் சத்துணவு பெண் ஊழியர் ஒருவர் படுகாயமடைந்ததற்கு அண்ணாமலை அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.
பள்ளி மேற்கூரை இடிந்து விழுந்து ஊழியர் காயம்
கடலூர் மாவட்டத்தில் உள்ள பண்ருட்டி சன்னியாசிபேட்டை ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி சமையல் கூடத்தின் மேற்கூரை இன்று காலை இடிந்து விழுந்தது.
அப்போது, அங்குள்ள பள்ளி வளாகத்தில் அமைந்திருக்கும் சத்துணவு கூடத்தில் சமையல் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பெண் ஊழியர் மீது கூரை விழுந்ததில் அவருக்கு காயம் ஏற்பட்டது. பின்னர், அக்கபக்கத்தினர் வந்து சமையல் ஊழியரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அண்ணாமலை கூறியது
இந்த விவகாரம் தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில்,"பண்ருட்டி சன்னியாசிபேட்டை ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி சமையல் கூடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்திருக்கிறது. இந்த விபத்தில் சத்துணவு பெண் அமைப்பாளர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழகம் முழுவதும் சிதிலமடைந்து இருக்கும் பத்தாயிரத்துக்கும் அதிகமான பள்ளிக் கட்டிடங்களை இடித்து, புதிய கட்டிடங்கள் கட்டப் போவதாக அறிவித்த திமுக, அதன் பிறகு அது குறித்துப் பேசுவதே இல்லை. பெரும் விபத்து ஏற்பட்டால்தான் தமிழக அரசுக்கு முழிப்பு வருமா?
தேவையில்லாத விளம்பரச் செலவினங்களை விடுத்து, மாணவர்களுக்குப் பயன்படும் பள்ளிக் கட்டிடங்களை உடனடியாகக் கட்டித் தர வேண்டும் என்று, தமிழக அரசை வலியுறுத்துகிறேன்" எனக் கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |