டெல்லி கார் வெடிப்பு சம்பவம்: முன்பே கணித்த பள்ளி மாணவன்! வைரல் பதிவு
டெல்லியில் நடந்த கார் வெடிப்பு சம்பவத்தை முன்பே கணித்த பள்ளி மாணவனின் பதிவு இணையத்தில் வைரல் ஆகியுள்ளது.
டெல்லியில் கார் வெடிப்பு சம்பவம்
இந்திய தலைநகர் டெல்லியில் நேற்று (நவம்பர் 10) மாலை 6.52 மணியளவில், செங்கோட்டை மெட்ரோ நிலையம் அருகே, சுபாஷ் மார்க் சிக்னலில் ஒரு ஹூண்டாய் i20 கார் திடீரென வெடித்து சிதறியது.

இதில் கிட்டத்தட்ட 13 பேர் கொல்லப்பட்டதாகவும், பலர் படுகாயமடைந்து இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கார் வெடிப்பு சம்பவத்தின் போது அருகில் நின்றிருந்த வாகனங்களும் தீப்பிடித்து எரிந்ததுடன், வெடிப்பு சத்தம் ITO வரை கேட்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக டெல்லி காவல்துறையினர் உபா(UAPA) பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வெடிப்பு சம்பவத்தின் போது காரில் 2 பேர் வரை இருந்ததாக கூறப்படும் நிலையில், காரை ஓட்டியதாக சந்தேகிக்கப்படும் நபர் பரிதாபத்தில் கைது செய்யப்பட்ட மர்ம குழுவை சேர்ந்த மருத்துவர் உமர் முகமது என கூறப்படுகிறது.

முன்பே கணித்த பள்ளி மாணவன்
இந்நிலையில் டெல்லி கார் வெடிப்பு சம்பவத்தை சில மணி நேரங்கள் முன்பே கணித்த பள்ளி சிறுவன் ஒருவரின் இணையதள பதிவு வைரலாகி வருகிறது.

சிறுவனின் Reddit தளப் பதிவில், பள்ளியை முடித்துவிட்டு செங்கோட்டை மெட்ரோ வழியாக வந்த 12ம் வகுப்பு மாணவன், அப்பகுதியில் வழக்கத்துக்கு மாறாக அதிகமான பொலிஸாரும், ராணுவத்தினரும் குவிக்கப்பட்டு இருப்பதை கண்டதாக தெரிவித்துள்ளார்.
இந்த பதிவை கார் வெடிப்பு சம்பவத்திற்கு 3 மணி நேரத்துக்கு முன்னதாக மாணவன் பதிவிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |