ஒரே ஒரு மாணவன் மற்றும் ஒரே ஒரு ஆசிரியருக்காக செயல்படும் அரசு பள்ளி.., எந்த மாநிலத்தில்?
அரசு தொடக்க பள்ளியானது ஒரே ஒரு மாணவன் மற்றும் ஆசிரியருக்காக செயல்பட்டு வருகிறது.
எங்குள்ளது?
இந்திய மாநிலமான ஆந்திரப்பிரதேசம், மடிகேரா பொம்மன பள்ளியில் அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் சில ஆண்டுகளுக்கு முன்பாக 170 மாணவ, மாணவிகள் படித்தனர்.
ஆனால், தற்போது கிராமத்தில் உள்ள பலரும் பிழைப்புக்காகவும், வேலை தேடியும் ஐதராபாத்திற்கு புலம்பெயர்ந்து சென்று விட்டனர். இதனால் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து விட்டது.
மேலும் பல மாணவர்களின் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை தனியார் பள்ளியில் படிக்க வைக்கின்றனர்.
இந்த காரணத்தால் கிராமத்தில் உள்ள பள்ளியில் 5 வகுப்புகளுக்கும் சேர்ந்து 4 மாணவர்கள் படித்து வந்தனர்.
ஆனால், பள்ளிக்கு வந்து கொண்டிருந்த 3 மாணவர்கள் சில காரணங்களால் வருவதே இல்லை. இதனால் பள்ளியில் இருக்கும் ஒரே ஒரு ஆசிரியர் ஒரே ஒரு மாணவருக்கு பாடம் நடத்துகிறார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |