கொரோனா பாதிப்புக்கு பின்னர் பக்கவாதம்... பரிதாபமாக இறந்த பிரித்தானிய பள்ளி மாணவன்
பிரித்தானியாவில் பள்ளி மாணவர்களுக்கு தடுப்பூசி தாமதமாகும் நிலையில், ஒரே பள்ளியில் அடுத்தடுத்து இரு மாணவர்கள் கொரோனா பாதிப்பால் மரணமடைந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரித்தானியாவில் புனித ஜான் ஃபிஷர் கத்தோலிக்க கல்லூரி மாணவரான 10ம் வகுப்பு முகமது ஹபீப் என்பவரே கொரோனா பாதிப்பால் மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில், திடீரென்று பக்கவாதத்தால் பாதிக்கப்பட, அக்டோபர் 24ம் திகதி சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.
தற்போது வெளியான மருத்துவ பரிசோதனை அறிக்கையில் சிறுவன் முகமது மூளையில் ரத்தக்கசிவு, பக்கவாதம் மற்றும் கொரோனா தொற்றால் இறந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மட்டுமின்றி, நீதிமன்றத்தில் குறித்த தரவுகள் நிரூபணமாகியுள்ளது. முகமது பயிலும் அதே பள்ளியில் 11ம் வகுப்பு மாணவன் ஒருவன் கொரோனாவால் அக்டோபர் 30ம் திகதி இறந்துள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
குறித்த மாணவன் இறந்த விவகாரம் தொடர்பில் ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், இதுவரை உறுதியான தகவல் வெளியாகவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜான் ஃபிஷர் கத்தோலிக்க கல்லூரியில் நவம்பர் மாத மத்தியில் கொரோனா தடுப்பூசி வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இதனால், இறந்த இரு மாணவர்களும் தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை என்பது உறுதியாகியுள்ளது.