தேர்வில் தோற்றதால் நீதிமன்றம் சென்ற சுவிஸ் மாணவருக்குக் கிடைத்த ஏமாற்றம்
சுவிட்சர்லாந்தில், தேர்வில் தோற்ற மாணவர் ஒருவர், மறு மதிப்பீடு கோரி நீதிமன்றம் சென்ற நிலையில், தேர்வில் மட்டுமின்றி வழக்கிலும் அவர் தோல்வியை சந்திக்க நேர்ந்தது.
தேர்வில் தோல்வியடைந்த மாணவர்
ஜெனீவாவைச் சேர்ந்த மாணவர் ஒருவர், பட்டப்படிப்புக்குத் தகுதி பெறும் தேர்வில் தோல்வியடைந்தார். கணிதத்திலும் visual arts பாடத்திலும் தனக்கு அதிக மதிப்பெண்கள் கிடைத்திருக்கக்கூடும் என்ற சந்தேகம் அவருக்கு ஏற்பட்டது.
ஆகவே, மறு மதிப்பீடு கோரி அவர் பெடரல் நீதிமன்றம் சென்றார். ஆனால், அவர் இரண்டு பாடங்களிலும் மோசமான மதிப்பெண்கள் எடுத்து தோல்வியடைந்ததாக விடைத்தாள்களை திருத்திய தேர்வர்கள் நீதிபதியிடம் தெரிவித்தார்கள்.
ஆகவே, அந்த மாணவரின் வழக்கை பெடரல் நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. தேர்வில் மட்டுமின்றி, வழக்கிலும் தோல்வியடைந்துவிட்டார் அவர்.