பல முறை கெஞ்சிய தாயார்... திருப்பி அனுப்பிய மருத்துவமனை: நொறுங்கிப்போன பிரித்தானிய குடும்பம்
பிரித்தானியாவில் Strep A தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 8 வயது சிறுவனுக்கு உரிய சிகிச்சை அளிக்காமல் இரண்டு முறை மருத்துவமனையில் இருந்து திருப்பி அனுப்பியதாக தாயார் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.
கண்டுகொள்ளாத மருத்துவமனை
குறித்த தாயார் பல முறை கெஞ்சியும் மருத்துவமனை நிர்வாகம் கண்டுகொள்ளாத நிலையில், ஜனவரி 6ம் திகதி சிறுவன் பரிதாபமாக மரணமடைந்துள்ளான். கடந்த டிசம்பர் 10ம் திகதி இருமல் மற்றும் கடுமையான காய்ச்சல் காரணமாக 8 வயதான சிறுவன் முகமது இசான் டேனிஷ் பிராட்ஃபோர்ட் ராயல் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளார்.
@swns
சுமார் 6 மணி நேர காத்திருப்புக்கு பின்னர் சிறுவனுக்கு ibuprofen அளித்துவிட்டு வீட்டுக்கு திருப்பி அனுப்பியுள்ளனர். இந்த நிலையில், அடுத்த நாள் மதியத்திற்கு மேல் மார்பு வலி காரணமாக சிறுவன் முகமதுடன் அதே மருத்துவமனையை நாடியுள்ளனர்.
அப்போதும் பல மணி நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக சிறுவனின் தாயார் சஜிதா ஜபீன் தெரிவித்துள்ளார். மட்டுமின்றி மார்பு வலியால் துடிக்கும் சிறுவனை தரையில் படுக்க வைத்து, காத்திருக்க வைத்துள்ளனர்.
மேலும், சிறுவனுக்கு மீண்டும் ibuprofen அளித்துவிட்டு வீட்டுக்கு திருப்பி அனுப்பியுள்ளனர். ஆனால் சிறுவனுக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்பின் உண்மை நிலை டிசம்பர் 12ம் திகதி பொது மருத்துவர் ஒருவரால் உறுதி செய்யப்பட்டுள்ளது.
சிறுவன் பரிதாப மரணம்
மட்டுமின்றி, சிறுவனின் பரிதாப நிலை கண்டு அந்த மருத்துவர் அதிர்ச்சியில் உறைந்து போனதாகவும் சஜிதா ஜபீன் தெரிவித்துள்ளார். மட்டுமின்றி, இப்படியான ஒரு சூழலில் ஏன் இன்னும் மருத்துவமனைக்கு சிறுவனை கொண்டுசெல்லவில்லை என அந்த மருத்துவர் சஜிதா ஜபீனை கடிந்துகொண்டுள்ளார்.
@swns
ஆனால், தாம் இரண்டு முறை மருத்துவமனைக்கு சென்றதும், அங்குள்ள மருத்துவர்கள் உரிய சிகிச்சை அளிக்கவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். இதனிடையே சிறுவனின் நிலை மிகவும் மோசமடைய, ஜனவரி 6ம் திகதி Strep A தொற்றுக்கு தொடர்புடைய நிமோனியா பாதிப்பால் சிறுவன் முகமது மரணமடைந்துள்ளான்.
சிறுவன் முகமதின் மரணம் மொத்த குடும்பத்தையும் நொறுக்கியுள்ளதாகவே சஜிதா ஜபீன் தெரிவித்துள்ளார். சிறுவன் முகமது உட்பட 18 வயதுக்கு குறைவான 30 பேர்கள் இதுவரை Strep A தொற்றுக்கு பிரித்தானியாவில் மரணமடைந்துள்ளனர்.
2017 மற்றும் 2018ல் Strep A தொற்றுக்கு பிரித்தானியாவில் 27 இளம் வயதினர் மட்டுமே மரணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.