பிரித்தானிய தாயார் ஒருவரின் கொடுஞ்செயல்... பரிதாபமாக பறிபோன சிறார் இருவரின் உயிர்
பிரித்தானியாவில் தாயார் ஒருவர் தமது பிஞ்சு பிள்ளைகள் இருவரையும் கத்தியால் தாக்கி கொலை செய்துவிட்டு, கணவரையும் குத்திக் கொலை செய்ய முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மோசமான காயங்களுடன் இறந்த நிலையில்
குறித்த சம்பவம் தொடர்பாக பொலிசார் வெளியிட்டுள்ள தகவலில், 11 வயதான ஈதன் ஜான் மற்றும் ஏழு வயது எலிசபெத் ஜான் ஆகியோர் மோசமான காயங்களுடன் தங்கள் வீட்டில் இறந்த நிலையில் மீட்கப்பட்டனர் என குறிப்பிட்டுள்ளனர்.
Credit: Staffordshire Police
இந்த விவகாரம் தொடர்பில் சிறுவர்களின் தாயாரான 49 வயது பெண்மணியை கைது செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். குறித்த பெண்மணியின் கணவர் வாகனம் சுத்தம் செய்யும் பணி செய்து வருபவர் எனவும், சம்பவத்தின் போது கத்தியுடன் அவரை நெருங்கிய அந்த பெண்மணி, யாரும் எதிர்பாராத நிலையில் அவரை தாக்கியதாகவும் அக்கம்பக்கத்தினர் நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
அந்த நபர் அலறுவதை காதால் கேட்டேன் என 25 வயது நபர் ஒருவர் பொலிசாரிடம் தெரிவித்துள்ளார். இதனிடையே, ஈதன் மற்றும் எலிசபெத்தின் பாடசாலை நிர்வாகம் அஞ்சலி செலுத்தியுள்ளது.
The Sentinel
அந்த சிறார்களுக்கு தாயார்
பழகுவதற்கு இனிமையான சிறுவர்கள் இருவரும் என அவர்களது பாடசாலை தோழர்கள் தெரிவித்துள்ளனர். இதனிடையே, அந்த பெண், மரணமடைந்த குழந்தைகளுக்கு அறிமுகமானவர் என்பதை ஸ்டாஃபோர்ட்ஷைர் பொலிசார் முன்பு உறுதிப்படுத்தினர்.
Credit: Staffordshire Police
அதன் பின்னர் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில், அவர் அந்த சிறார்களுக்கு தாயார் என்பது உறுதி செய்யப்பட்டது.
மேலும், என்ன நடந்தது, ஏன் தமது பிள்ளைகளை அவர் கொலை செய்தார் என்பது உள்ளிட்ட கேள்விகளுக்கு விடை தேட முயற்சிக்கப்படும் என பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.