பிரித்தானிய பிரதமரை மடக்கிய சிறுமி
பிரித்தானிய பிரதமரை நேருக்கு நேராக பார்த்து, நீங்கள் பணக்காரர், உங்களால் எப்படி விலைவாசி பிரச்சினையை தீர்க்கமுடியும் என்று கேள்வி கேட்டாள் சிறுமி ஒருத்தி.
பிரதமர் அளித்த பதில்
நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பிரதமர் ரிஷி சுனக்கிடம், லண்டனிலுள்ள Highgate என்னும் இடத்தைச் சேர்ந்த மாணவியான ரூபி, இந்த குளிர்காலம் நம்மெல்லாருக்கும் மிகவும் கடினமான ஒன்றாக இருந்தது. கஷ்டப்படும் குடும்பங்களுக்கு எப்படி உதவுவது என்பது பணக்காரரான உங்களுக்கு எப்படித் தெரியும் என்று கேட்டாள்.
Image: @FYI_SkyTV/Twitter
அதற்கு பதிலளித்த ரிஷி, ஒருவரை அவர் என்ன பணி செய்கிறார் என்பதையோ, அவர் எங்கிருந்து வருகிறார் என்பதையோ வைத்து மதிப்பிடுவதைவிட, அவர் என்ன செய்கிறார் என்பதை வைத்து மதிப்பிடுவதுதான் சிறந்தது.
ஆகவே, என்னுடைய செயல்களை வைத்து நீங்கள் என்னை மதிப்பிடலாம் என்றார் ரிஷி.