பாடசாலை நண்பர்கள் இருவர்...ரூ 1 லட்சம் முதலீட்டில் தொடங்கிய நிறுவனம்: மலைக்க வைக்கும் வளர்ச்சி
பாடசாலையில் இருந்தே நண்பர்களான இருவர், பெருந்தொகை சம்பளத்துடனான வேலையை விட்டுவிட்டு தொடங்கிய நிறுவனம், இன்று அசுர வளர்ச்சியை எட்டியுள்ளது.
பெருந்தொகை சம்பளத்தில் பணி
டெல்லியில் ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டம் பெற்ற Raghib Khan மற்றும் Faisal Abidi ஆகிய இரு நண்பர்களும், முதன்மையான நிறுவனங்களில் பெருந்தொகை சம்பளத்தில் பணியில் சேர்ந்தனர்.
ஆனால் தங்களது திறமைக்கான வேலை இதுவல்ல என்பதை உணர்ந்த இருவரும், பெங்களூருவில் RNF Technologies என்ற நிறுவனத்தை தொடங்கினர். ரூ 1 லட்சம் முதலீட்டில் வெறும் 2 ஊழியர்களுடன் 2010ல் துவங்கப்பட்ட இந்த நிறுவனத்தில் தற்போது 400 ஊழியர்கள் பணியாற்றுகின்றனர்.
சந்தை மதிப்பு ரூ 400 கோடி
வெளியான தரவுகளின் அடிப்படையில் இந்த நிறுவனத்தின் தற்போதைய சந்தை மதிப்பு என்பது ரூ 400 கோடி என்றே கூறப்படுகிறது. இந்த நிறுவனத்தின் வெற்றி என்பது நண்பர்களின் விடாமுயற்சி, கனவு மற்றும் சவால்களை எதிர்கொள்ளும் தைரியம் என பட்டியலிடுகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |