பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்... பிரித்தானியாவில் பரபரப்பு
Schools across Scotland have reportedly been hit with bomb threats: ஸ்கொட்லாந்திலுள்ள பல பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஸ்கொட்லாந்திலுள்ள பல பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள விடயம், பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது.
பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்...
இன்று, ஸ்கொட்லாந்திலும், பிரித்தானியாவின் மற்ற சில பகுதிகளிலும் அமைந்துள்ள நூற்றுக்கணக்கான பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக ஸ்கொட்லாந்து பொலிஸ் செய்தித்தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அந்த செய்திகள் குறித்து உடனடியாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில், அந்த செய்திகளில் உண்மையில்லை, அதாவது, அவை வதந்திகள் என தெரியவந்துள்ளது என்று கூறியுள்ள அவர், என்றாலும், இத்தகைய செய்திகள் பிள்ளைகளுக்கும், பெற்றோருக்கும், பள்ளி ஊழியர்களுக்கும் எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை அறிந்துள்ளோம் என்றும் கூறியுள்ளார்.
ஸ்கொட்லாந்து பொலிஸ் சைபர் பிரிவு மற்றும் மோசடிப் பிரிவு அதிகாரிகள், பிரித்தானியா மற்றும் சர்வதேச சட்ட அமலாக்க அதிகாரிகளுடன் இணைந்து இந்த மிரட்டல்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், பல பள்ளிகளிலிருந்து மாணவர்கள் வெளியேற்றப்பட்டுவருவதாகவும், பிள்ளைகள் பாதுகாப்பாக வீடுகளுக்கு அனுப்பப்படுவார்கள், பெற்றோர் பிள்ளைகளை அழைத்துச் செல்வதற்காக பள்ளிகளுக்கு வரவேண்டாம் என்று பெற்றோருக்கு செய்திகள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தி சன் ஊடகம் தெரிவித்துள்ளது.