இலங்கையில் பாடசாலைகளை மீள திறப்பது தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்
இலங்கையில் சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களுக்கமைய எதிர்வரும் மாதம் பாடசாலைகளை மீள திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விடயத்தை கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஷ் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். மேலும் குறிப்பிடுகையில், கோவிட் - 19 வைரஸ் தாக்கத்தின் காரணமாக பாடசாலைகள் தொடர்ச்சியாக மூடப்பட்டுள்ளன.
மாணவர்களின் கல்வித்துறைக்கு பாரியதொரு சவால் ஏற்பட்டுள்ளன. தொலைநோக்கு கல்வி முறைமை ஊடாக கற்றல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டாலும் அவை முழுமையற்றதாக காணப்படுகிறது.
இணையவழி முறையிலான கல்வி முறைமையை பாடசாலை கல்வி முறைமையுடன் ஒப்பிட முடியாது. கல்வித் துறைக்கு ஏற்பட்டுள்ள சவால் நிலையினை குறைந்தளவிற்கு குறைத்து கொள்வதற்காகவே இணையவழி முறைமையிலான கற்றல் இடம்பெறுகிறது.
அரச மற்றும் தனியார் தொலைக்காட்சி சேவை ஊடாக கல்விசார் நிகழ்ச்சிகள் தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் ஒளிப்பரப்பாகுகின்றன.