பிரித்தானியாவில் மீண்டும் பள்ளிகளை திறப்பது இதற்கு தான் வழிவகுக்கும்! போட்டுடைத்த விஞ்ஞானி
பிரித்தானியாவில் பள்ளிகளை மீண்டும் திறப்பது ஒமிக்ரான் பாதிப்பு மேலும் அதிகரிக்க வழிவகுக்கும் என பிரபல விஞ்ஞானியும், பேராசியருமான நீல் பெர்குசன் தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவில் கிறிஸ்மஸ் விடுமுறைக்காக மூடப்பட்ட பள்ளிகளில், அடுத்த வாரம் திறக்கப்படவுள்ளன.
அதேசமயம், மாணவர்கள் வகுப்பறையில் முகக் கவசம் அணிய வேண்டும் என அரசு அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக பேராசிரியர் நீல் பெர்குசன் கூறியதாவது, தற்போது வரை பள்ளிகளில் பரவ ஒமிக்ரானுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் மாணவர்கள் மீண்டும் பள்ளிக்கு திரும்பும் போது இந்த நிலை மாறும்.
கடந்த சில மாதங்களாக பள்ளி வயது குழந்தைகள் மற்றும் முதியோர்களிடையே டெல்டா மாறுபாடு தீவரமாக பரவியது.
ஒமிக்ரான் 18-45 வயதினரிடையே பரவி வருகிறது. ஆனால், பள்ளிகள் முன்னதாகவே மூடப்பட்டதால் குழந்தைகள் மத்தியில் பரவுவதற்கு அதற்கு போதிய நேரம் கிடைக்கவில்லை.
பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட உள்ளதால், குழந்தைகள் மத்தியில் இப்போது அதிக தொற்று அளவைக் காணலாம் என பேராசியருமான நீல் பெர்குசன் தெரிவித்துள்ளார்.
எனினும், ஒமிக்ரான் வீரியம் குறைவாக இருப்பது ஒரு நல்ல செய்தி என நீல் பெர்குசன் குறிப்பிட்டுள்ளார்.