மாணவர்கள் மத்தியில் கொரோனா அதிகரிப்பு! மாணவர் எண்ணிக்கையை வரையறுக்க கோரிக்கை!
கொரோனா தொற்று அதிகரித்து வருவதை அடுத்து, பாடசாலைகளில் மாணவர்களி்ன் எண்ணிக்கை வரையறுக்கப்படவேண்டும் என்று சுகாதார அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
பொது சுகாதார அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் உப்புல் ரோஹன அந்த வலியுறுத்தலை விடுத்துள்ளார்.
இந்த விடயத்தில் அதிகாரிகள் உடனடியான நடவடிக்கையை எடுக்கவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
தற்போது பாடசாலை மாணவர்கள் மத்தியில் கொரோனா தொற்று பரவி வருகிறது. இது தொடருமாக இருந்தால், கல்வி அமைப்பு பாரியளவில் பாதிக்கப்படும் என்று அவர் எச்சரித்துள்ளார்.
நாட்டில் உள்ள பாடசாலைகளின் வகுப்பறைகள் வரையறுக்கப்பட்ட அளவிலேயே உள்ளன.
இதனால் காற்றோட்டம் குறைவாகவே உள்ளது.
இதன் காரணமாக கொரோனாவின் பரவல் அதிகமாக உள்ளது என்று உபுல் ரோஹன தெரிவி்த்துள்ளார்.
இதேவேளை நுவரெலியாவில் உள்ள பாடசாலை மாணவர்கள் மத்தியில் அதிக கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக ரோஹன குறிப்பிட்டுள்ளார்.