பொதுவாக பலரும் அறியாத அறிவியல் உண்மைகள்! தெரிந்து கொள்ளுங்கள்
Education
Science
By Kishanthini
பலரும் அறியாத சில அறிவியல் உண்மைகள் சிலவற்றை இங்கே தெரிந்து கொள்வோம்.
- ஒருவர் இறந்த பிறகும் அவரது உடலில் இருந்து வாயு வெளியேறும், தசைகளில் ஏற்படும் இறுக்கத்தால் வாயு தானாக உடலில் இருந்து வெளியேறிவிடும்.
- சில சமயங்களில் அணு ஆயுத கழிவுகள் மற்றும் கதிரியக்க மண்ணை சுத்தம் செய்ய சூரியகாந்தி மலர்கள் உதவுகின்றன.
- சுத்தமான தண்ணீரில் அவ்வளவாக மின்சாரம்பாயாது, காரணம் சுத்தமான நீரில் தாதுக்கள் (Impurities and Minerals) இல்லாதிருப்பதால் மின்சாரம் பாய்வதில்லை.
- முழு ஆக்ஸிஜன் மரத்தில் இருந்து கிடைப்பதில்லை.உலகத்தில் உற்பத்தியாகும் பாதி அளவு ஆக்ஸிஜன் கடலில் இருந்து தான் வருகிறது.இவை கார்பன்டை ஆக்சைடு மற்றும் சூரிய ஒளியை உட்கொண்டு ஆக்ஸிஜன் உற்பத்தி செய்து வெளிபடுத்துகின்றன.
- மனிதன் இறந்த பின்பு மனித இரத்தம் பார்ப்பதற்க்கு நீலமாகவோ அல்ல அடர்ந்த சிவப்பு நிறமாகவோ இருக்காது. ஆனால் தோலின் வழியாக பார்த்தால் இரத்தமானது எப்பொழுதும் நீல நிறமாகவே காட்சியளிக்கும்.
- பெண் சிலந்திப் பூச்சிகள், ஆண் சிலந்தியுடனான உறவுக்குப் பின் அதைக் கொன்று விடுகின்றன.
- ஒவ்வொரு 15 நாட்களுக்கு ஒருமுறையும் அமாவாசை மற்றும் பௌர்ணமி மாறி மாறி வரும். அதனால் மாதத்தில் ஒரு முறையாவது அமாவாசையும் பௌர்ணமியும் வந்துவிடும். 1865ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மட்டும் தான் பௌர்ணமியே வராத மாதம்.
- பிரபஞ்சத்தின் பெரும்பாலான பகுதியில் என்ன உள்ளது என்பது யாருக்கும் தெரியாதும், 96 சதவிகிதம் ஆனது மனிதர்களால் கண்டறிய முடியாத இருண்ட விஷயம் (டார்க் மேட்டர்) மற்றும் இருண்ட ஆற்றலால் நிரம்பி உள்ளது.
- மனித மரபணுக்களில் உள்ள டி.என்.ஏ வின் எண்ணிக்கை சுமார் 3 பில்லியன் அடிப்படை ஜோடிகளும், சுமார் 25,000 மரபணுக்களும் (ஜீன்ஸ்) உள்ளன என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
- தீவிர வெப்பநிலைக்கு பிறகு ஹீலியம் ஆனது ஒரு சூப்பர்ஃப்ளூயிட் ஆக மாறும். அந்த நிலையில் ஹீலியத்தால் புவியீர்ப்புக்கு எதிராக செயல்பட முடியும்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US