கொரோனாவுக்கு எதிராக ஊரடங்கு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது! வெளிப்படையாக கூறிய விஞ்ஞானி
கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கைகளை அமுல்படுத்துவது சிறிதளவு தாக்கத்தை தான் ஏற்படுத்தும் என விஞ்ஞானி தெரிவித்துள்ளார்.
மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தின் உலகளாவிய சுகாதாரப் பேராசிரியரான டாக்டர் முகேஷ் கபிலா கூறியதாவது, மக்கள் பொது இடங்களில் கூடுவது குறித்து விழிப்புடன் இருப்பது புத்திசாலித்தனம், ஆனால் ஊரடங்கு குறித்து எனக்கு இரட்டை நிலைப்பாடு உள்ளது.
உண்மை என்னவென்றால், ஊரடங்குகள் வைரஸின் பரவலை மட்டுமே தாமதப்படுத்துகின்றன.
ஆனால் வைரஸ் ஏற்கனவே மிக வேகமாக பரவி வருகிறது என்றால், ஊரடங்குகள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துமா என்று எனக்குத் தெரியவில்லை.
ஊரடங்கு அரசியல் ரீதியான முடிவாக இருக்கும். அறிவியல் அல்லது தொற்றுநோயியல் அடிப்படையிலான முடிவு அல்ல. ஆனால் அது தற்போதைக்கு மிக நேர்த்தியான முடிவு.
ஊரடங்கு அமுல்படுத்துவதின் மூலம் மக்கள் பலருக்கு பூஸ்டர் தடுப்பூசி போட கூடுதல் நேரம் கிடைக்கும் என்ற வாதத்தை தான் ஏற்றுக்கொள்வதாக கூறிய டாக்டர் முகேஷ் கபிலா, ஆனால் அதன் தாக்கம் சிறதளவு தான் இருக்கும் என குறிப்பிட்டுள்ளார்.
இன்று அல்லது நாளை முழு ஊரடங்கு போன்ற ஒரு கடுமையான முடிவெடுக்க, இந்த மாறுபாடு மற்றும் அதன் தாக்கம் பற்றி எங்களுக்கு போதுமான அளவு தெரியாது என டாக்டர் முகேஷ் கபிலா கூறினார்.