எல் நினோவில் தமிழ்நாட்டிற்கு ஏற்பட உள்ள பாதிப்பு - ஆராய்ச்சியாளர் வெங்கடேசன் விளக்கம்
El Nino in tamil naduஎல் நினோவால் தமிழ்நாடு எதிர்கொள்ள உள்ள பாதிப்புகள் குறித்து ஆராய்ச்சியாளர் வெங்கடேசன் பல்வேறு கருத்துகளை பகிர்ந்துள்ளார்.
எல் நினோவில் தமிழ்நாட்டிற்கு என்ன பாதிப்பு?
இது குறித்து பேசிய அவர், "எல் நினோ உருவாகிவிட்டது. ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் வழக்கமான வெப்பநிலையை விட 2.2 டிகிரி வெப்பநிலை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக இந்தியாவில் வறட்சி, வெள்ளம் ஆகியவை ஏற்படும்.

தமிழ்நாட்டில் இதன் காரணமாக தென்மேற்கு பருவமழை குறையும். வடகிழக்கு பருவ மழை அதிகரிக்கும்" என தெரிவித்துள்ளார்.
மேலும், எல் நினோ காலத்தில் புயல் வலிமையாக மற்றும் தீவிரமாக இருக்கும். அதிக மழைப்பொழிவு ஏற்படும் போது, அந்த நீரை வெளியேற்றுவதற்கான திட்டத்துடன் தயாராக இருக்க வேண்டும்" என தெரிவித்துள்ளார்.
சூப்பர் எல் நினோ ஏற்படுவது உறுதி, ஆனால் அதன் பாதிப்பை குறைக்ககூடிய வகையில் indian ocean dipole உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும், எல் நினோ சென்னைக்கு எந்த அளவிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் எனவும், இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுமா?, indian ocean dipole என்றால் என்ன என பல்வேறு தகவல்களை ஆராய்ச்சியாளர் வெங்கடேசன் விரிவாக வழங்கியுள்ளார்.
மேலதிக தகவல்களுக்கு வீடியோவை காண்க
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |