சூரியனை விட பாரிய கருந்துளை! பூமிக்கு ஆபத்தா? விஞ்ஞானிகள் விளக்கம்
சூரியனை விட 5 மடங்கு பாரிய கருந்துளையை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
பாரிய உருவத்துடன் காணப்படும் கருந்துளை
நட்சத்திரங்களையே விழுங்கும் அளவுக்கு திறன் வாய்ந்தவை கருந்துளைகள். இவை அவற்றை விழுங்கி, பின்னர் ஒளியை உமிழும் தன்மை பெற்றவை.
பால்வெளி மண்டலத்தில் உள்ள பல ஆச்சரியங்களில் இந்த கருந்துளையும் ஒன்று. பாரிய உருவத்துடன் காணப்படும் கருந்துளையை விஞ்ஞானிகள் குவாசர் என்கிறார்கள்.
இந்நிலையில் புதிதாக குவாசர் கருந்துளையை விஞ்ஞானிகள் பால்வெளி மண்டலத்தில் கண்டுபிடித்துள்ளனர். இது ஒரு சூரியனை விட 5 லட்சம் கோடி மடங்கு அதிக பிரகாசத்துடன் ஒளிரும் தன்மை கொண்டது.
1,200 கோடி ஆண்டுகள்
ஒரு நாளைக்கு ஒரு சூரியன் என்ற விகிதத்தில் இது வளர்ச்சி அடைந்து வருகிறது. விஞ்ஞானிகள் இதற்கு J0529-4351 என பெயரிட்டுள்ளனர்.
இதுகுறித்து வானியியலாளர்கள் வெளியிட்ட அறிக்கையில், "பூமியில் இருந்து இந்த குவாசர் மிக அதிக தொலைவில் அமைந்துள்ளது. அதனுடைய ஒளியானது பூமியை வந்தடைய 1,200 கோடி ஆண்டுகள் எடுத்துக் கொள்கிறது. இது தவிர இந்த குவாசர்கள் நட்சத்திரங்களை ஒத்து காணப்படுகின்றன" என கூறப்பட்டுள்ளது.
இதன்மூலம் பூமிக்கு இந்த குவாசரால் பாதிப்பு ஏற்படுவதற்கான சாத்தியம் எதுவும் தெரிய வரவில்லை. எனினும், நட்சத்திரங்களில் ஒன்றான சூரியனில் இருந்து எவ்வளவு தொலைவில் இந்த குவாசர் உள்ளது என்பது பற்றிய விவரம் வெளியாகவில்லை.
வானியியலாளர்
அவுஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தின் வானியியலாளர் மற்றும் தலைமை ஆராய்ச்சியாளரான கிறிஸ்டியன் உல்ப் கூறுகையில்,
"இந்நாள் வரையில் மிக விரைவில் வளர கூடிய கருந்துளை ஒன்றை நாங்கள் கண்டறிந்து உள்ளோம். அது 1,700 கோடி சூரியன்களின் நிறையைக் கொண்டுள்ளது.
ஒரு நாளைக்கு ஒன்று என்ற கணக்கில் சூரியனை அது உட்கொள்கிறது. இதனால், அண்டவெளியில் அதிகம் ஒளிரக்கூடிய ஒன்றாக இந்த குவாசர் காணப்படுகிறது" என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |