உருகும் உலகின் பனிப்பாறைகள்; சென்னைக்கு பெரும் பாதிப்பு?
உலகின் பனிப்பாறைகள் உருகி வருவதால், சென்னை உள்ளிட்ட நகரங்கள் பெரும் பாதிப்பை எதிர்கொள்ளும் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
பனிப்பாறைகள் உருகினால் என்ன ஆகும்?
காலநிலை மாற்றம் காரணமாக உலகின் பனிப்பாறைகள் உருகி வருவது குறித்து விஞ்ஞானிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

பனிப்பாறைகள் உருகுவதால் கடல் நீர் மட்டம் அதிகரித்து, கடற்கரையோர நகரங்கள் கடலில் மூழ்க வாய்ப்புள்ளதாகவும், பாரிய அளவிலான இடம்பெயர்வு ஏற்படும் எனவும் எச்சரித்துள்ளனர்.
பூமியில் உள்ள உறைந்த ஏரிகள் உள்ளிட்ட மொத்த பனிப்பாறைகளும் உருகினால், கடல் மட்டம் சுமார் 70 மீட்டர் வரை உயரும். ஆனால் இது ஒரே நாளில் நடந்து விடாது, சில நூற்றாண்டுகள் ஆகும்.
அப்படி நிகழும் போது, உலகின் பல்வேறு கடற்கரை நகரங்கள் மூழ்க நேரிடும், மில்லியன் கணக்கான மக்கள் அந்த நகரங்களை விட்டு வெளியேற வேண்டி இருக்கும், உலகின் வரைபடமே மாறும் சூழல் உருவாகும் என எச்சரித்துள்ளனர்.
சென்னைக்கு பாதிப்பு?
இதில், இந்தியாவின் தமிழ்நாடு, மேற்கு வங்கம், ஒடிஷா, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களுக்கும் பாதிப்பை சந்திக்கும்.

குறிப்பாக சென்னை, கொல்கத்தா, கொச்சி, விசாககப்பட்டினம் உள்ளிட்ட நகரங்கள் பாரிய பாதிப்பை எதிர்கொள்ளும் என கணிப்பு தெரிவித்துள்ளனர்.
இதில் இந்தியா மட்டுமல்லாது, அமெரிக்காவின் நியூயார்க், சான் பிரான்சிஸ்கோ, ஆம்ஸ்டர்டாம் புளோரிடா மற்றும் மாலத்தீவுகள் மற்றும் பிஜி போன்ற பகுதிகளும் பாதிப்பை எதிர்கொள்ளும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |