புதிய வரலாற்று சாதனை! ஒரே இன்னிங்சில் முதல் சதம் விளாசிய வீராங்கனைகள்
தென் ஆப்பிரிக்க மகளிர் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து வீராங்கனைகள் முதல் சதம் விளாசி சாதனை படைத்துள்ளனர்.
இங்கிலாந்து மகளிர் அணிக்கும், தென் தென் ஆப்பிரிக்க மகளிர் அணிக்கும் இடையிலான டெஸ்ட் போட்டி டவுடோனின் தொடங்கியது.
தென் ஆப்பிரிக்க அணி தனது முதல் இன்னிங்சில் 284 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது. அதிகபட்சமாக மரிசன்னே கப் 150 ஓட்டங்கள் விளாசினார். பின்னர் ஆடிய இங்கிலாந்து 2வது நாள் ஆட்டநேர முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 328 ஓட்டங்கள் எடுத்துள்ளது.
அந்த அணியின் வீராங்கனைகள் நடாலி சிவெர் மற்றும் அலைஸ் டேவிட்ஸன் இருவரும் டெஸ்ட் கிரிக்கெட்டில் தங்களது முதலாவது சதத்தை பதிவு செய்தனர்.
PC: Getty Images
இதன்மூலம் மகளிர் கிரிக்கெட்டில் ஒரே இன்னிங்சில் தங்கள் முதல் சதத்தை அடித்த வீராங்கனைகள் என்ற சாதனையை அவர்கள் படைத்துள்ளனர்.
PC: Getty Images
அலைஸ் டேவிட்ஸனுக்கு இதுதான் முதல் டெஸ்ட் போட்டியாகும். அவர் 194 பந்துகளில் 17 பவுண்டரிகளுடன் 107 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். நடாலி சிவெர் 207 பந்துகளில் 15 பவுண்டரிகளுடன் 119 ஓட்டங்கள் எடுத்து களத்தில் உள்ளார். இவர்களின் கூட்டணி 207 ஓட்டங்கள் குவித்தது.
3️⃣2️⃣8️⃣ runs and 6️⃣ wickets on day two.
— England Cricket (@englandcricket) June 28, 2022
2️⃣ maiden Test centuries.
??????? #ENGvSA ?? day two highlights ?