சிக்ஸர் மழைபொழிந்த வீரர்! நேபாளத்தை பந்தாடிய ஸ்கொட்லாந்து
முத்தரப்பு டி20 போட்டியில் ஸ்கொட்லாந்து அணி 34 ஓட்டங்கள் வித்தியாசத்தில் நேபாளத்தை வீழ்த்தியது.
ஜார்ஜ் முன்சே 78 ஓட்டங்கள்
டிட்வுட் மைதானத்தில் நடந்த டி20 போட்டியில் ஸ்கொட்லாந்து மற்றும் நேபாளம் அணிகள் மோதின.
முதலில் ஆடிய ஸ்கொட்லாந்து 193 ஓட்டங்கள் குவித்தது. சிக்ஸர்மழை பொழிந்த ஜார்ஜ் முன்சே 78 (39) ஓட்டங்கள் விளாசினார். அவரது ஸ்கோரில் 6 சிக்ஸர், 5 பவுண்டரிகள் அடங்கும்.
பிரண்டன் மெக்முல்லன் 42 (30) ஓட்டங்களும், மைக்கேல் லீஸ்க் 26 (17) ஓட்டங்களும் எடுத்தனர். குஷால் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
ஸ்கொட்லாந்து வெற்றி
பின்னர் ஆடிய நேபாள அணி 18.5 ஓவரில் 159 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது. இதன்மூலம் 34 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஸ்கொட்லாந்து வெற்றி பெற்றது.
நேபாள அணியின் தரப்பில் ருபேஷ் சிங் 43 (22) ஓட்டங்களும், திபேந்திர சிங் 34 ஓட்டங்களும் எடுத்தனர்.
ஸ்கொட்லாந்து அணியின் தரப்பில் கிறிஸ் கிரேவ்ஸ் 3 விக்கெட்டுகளும், ஷாரிப் 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
𝗦𝗖𝗢𝗧𝗟𝗔𝗡𝗗 𝗪𝗜𝗡!!!
— Cricket Scotland (@CricketScotland) June 20, 2025
We bowl Nepal out for 159 to win by 34 runs 🤩#FollowScotland pic.twitter.com/PAaSFWKWqu
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |