அமெரிக்க அணியை தவிடுபொடியாக நொறுக்கிய ஸ்கொட்லாந்து! 10 விக்கெட் வித்தியாசத்தில் இமாலய வெற்றி
Houstonயில் நடந்த ஒருநாள் போட்டியில் அமெரிக்கா மற்றும் ஸ்கொட்லாந்து அணிகள் மோதின.
முதலில் ஆடிய அமெரிக்க அணி 38.4 ஓவரில் 144 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது.
ஷாட்லே வான் ஸ்சால்வ்ய்க் 87 பந்துகளில் 10 பவுண்டரிகளுடன் 58 ஓட்டங்கள் எடுத்தார்.
5️⃣0️⃣ up for Shadley van Schalkwyk! ??#USAvSCO | #CWCL2 pic.twitter.com/1jwx2Uef6Q
— USA Cricket (@usacricket) October 25, 2024
இது இவருக்கு முதல் அரைசதம் ஆகும். பிராட்லி கர்ரி 4 விக்கெட்டுகளும், பிரண்டன் மெக்மல்லன் 3 விக்கெட்டுகளும், வீயெல் 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
பின்னர் களமிறங்கிய ஸ்கொட்லாந்து அணி 24.5 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 145 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.
அதிரடியில் மிரட்டிய ஆண்ட்ரு உமீத் 79 பந்துகளில் 2 சிக்ஸர், 13 பவுண்டரிகளுடன் 98 ஓட்டங்களும், சார்லி டீயர் 70 பந்துகளில் 43 ஓட்டங்களும் எடுத்தனர்.
???????? ???!!!
— Cricket Scotland (@CricketScotland) October 25, 2024
An unbeaten 98 from Andy Umeed leads us to a superb 10 wicket victory over the USA ?#FollowScotland pic.twitter.com/tPBo0uaxma
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |