சிக்ஸர் மழை! 79 பந்தில் முதல் ஒருநாள் சதத்தை விளாசிய வீரர்
நேபாளத்திற்கு எதிரான ஒருநாள் போட்டியில் ஸ்கொட்லாந்து அணி வீரர் மைக்கேல் லீஸ்க் அதிரடியாக சதம் விளாசினார்.
மைக்கேல் லீஸ்க்
நேபாளத்தின் கிர்டிப்பூரில் நேபாளம்-ஸ்கொட்லாந்து அணிகளுக்கு இடையிலான ஒருநாள் போட்டி நடந்து வருகிறது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நேபாளம் பந்துவீச்சை தெரிவு செய்தது.
அதன்படி களமிறங்கிய ஸ்கொட்லாந்து அணியில் கிறிஸ்டோபர் மெக்பிரைட் 22 ஓட்டங்களும், கேப்டன் பேரிங்டன் 19 ஓட்டங்களும் எடுத்து வெளியேறினர்.
அதன் பின்னர் களமிறங்கிய வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் வெளியேறினர். ஆனால் துடுப்பாட்டத்தில் ருத்ர தாண்டவம் ஆடிய மைக்கேல் லீஸ்க் சிக்ஸர்களை பறக்கவிட்டார். ஸ்கொட்லாந்து அணி 6 விக்கெட்டு 111 ஓட்டங்கள் என தடுமாறிய நிலையில், லீஸ்க்கின் அதிரடியால் ரன் வேகம் உயர்ந்தது.
@CricketScotland
முதல் ஒருநாள் சதம்
மைக்கேல் லீஸ்க் 79 பந்துகளில் தனது முதல் சர்வதேச சதத்தை பதிவு செய்தார். அவரது சதத்தின் மூலம் ஸ்கொட்லாந்து அணி 274 ஓட்டங்கள் குவித்தது.
கடைசி வரை களத்தில் நின்ற லீஸ்க், 85 பந்துகளில் 9 சிக்ஸர்கள் மற்றும் 3 பவுண்டரிகளுடன் 107 ஓட்டங்கள் எடுத்தார். நேபாள அணியின் தரப்பில் லாமிச்சேன் 3 விக்கெட்டுகளும், குஷால் மல்லா 2 விக்கெட்டுகளும் எடுத்தனர்.
@cricnepal.com