வாணவேடிக்கை காட்டிய வீரர்! உலகக்கோப்பையில் முதல் அரைசதம்
அயர்லாந்து அணி தரப்பில் கேம்பர் 9 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்
அடுத்து களமிறங்கிய அயர்லாந்து அணியின் தொடக்க விக்கெட்டுகளை ஷரீப், வீல் கைப்பற்றினர்
அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் ஸ்காட்லாந்து வீரர் மைக்கேல் ஜோன்ஸ் தனது முதல் அரைசதத்தினை விளாசியுள்ளார்.
ஹோபர்ட்டில் ஸ்காட்லாந்து மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி நடந்து வருகிறது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஸ்காட்லாந்து அணி முதலில் துடுப்பாட்டம் செய்தது.
தொடக்க வீரர் மைக்கேல் ஜோன்ஸ் அதிரடியில் மிரட்டினார். சிக்ஸர்களை பறக்கவிட்ட ஜோன்ஸ் 55 பந்துகளில் 86 ஓட்டங்கள் விளாசினார். இதில் 4 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகள் அடங்கும்.
Twitter (@CricketScotland)
மூன்றாவது சர்வதேச போட்டியில் விளையாடும் ஜோன்ஸிற்கு இது முதல் டி20 அரைசதம் ஆகும். கேப்டன் பேரிங்க்டன் 37 ஓட்டங்களும், கிராஸ் 28 ஓட்டங்களும் விளாசிய நிலையில் ஸ்காட்லாந்து அணி 176 ஓட்டங்கள் குவித்தது.
The highest individual score for Scotland at a @T20WorldCup.
— Cricket Scotland (@CricketScotland) October 19, 2022
? @mikejones04 #FollowScotland ??????? pic.twitter.com/8gtPR4cZlJ