ஸ்காட்லாந்தில் 3 மாத குழந்தையை ஹேர் ட்ரையர் பயன்படுத்தி கொன்ற தாய்: நீதிமன்றம் விதித்த தண்டனை
ஸ்காட்லாந்தில் 3 மாத குழந்தை கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தாய்க்கு 6 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
3 மாத குழந்தையை கொன்ற தாய்
ஸ்காட்லாந்தின் அபெர்டீன்ஷையர் என்ற பகுதியில் உள்ள பீட்டர்பெத் நகரில் கடந்த 2023ம் ஆண்டு செப்டம்பர் 30 திகதி நடைபெற்ற சம்பவத்தில் பெற்ற தாயே தன்னுடைய 3 மாத குழந்தையை வீட்டு உபயோக ஹேர் ட்ரையர்(HairDryer) மூலம் அதிக வெப்பத்தை செலுத்தி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

ஹேர் டிரையர் மூலம் வெளியான அதிகப்படியான வெப்பத்தினால் கைக்குழந்தையான டாலியா ரோஸுக்கு கொடூரமான காயம் ஏற்பட்டு இருந்தது.
அவசர மருத்துவ பிரிவினர் அளித்த தகவலை அடுத்து ஸ்காட்லாந்து பொலிஸார் கடந்த நவம்பரில் தாய் கோர்ட்னி கார்ட்ஷோர்(Courtney Gartshore) என்ற பெண்ணை கைது செய்து வழக்குப் பதிவு செய்து இருந்தனர்.
தண்டனை வழங்கிய நீதிமன்றம்
பல கட்ட விசாரணைக்கு பிறகு ஜூலை மாதம் அபெர்டீன் உயர் நீதிமன்றத்தில் கோர்ட்னி கார்ட்ஷோர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டார்.

இதையடுத்து எடின்பர்க் உயர் நீதிமன்றம் அவருக்கு 6 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துள்ளது.
பாதுகாப்பாக இருக்க வேண்டிய பச்சிளம் குழந்தை தன்னுடைய பெற்றோராலேயே கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருப்பதாக துப்பறியும் ஆய்வாளர் ஜேம்ஸ் காலண்டர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |