பனியில் விழுந்துக்கிடந்த மூதாட்டி; உதவாமல் சென்ற தபால்காரருக்கு நேர்ந்த கதி!
பிரித்தானியாவில் கடும் பனியில் விழுந்து கிடந்த மூதாட்டிக்கு உதவி செய்யாமல் அப்படியே விட்டுச் சென்ற தபால்காரர் தற்போது பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
ஸ்காட்லாந்தின் பால்கிர்க்கில் Patricia Stewart எனும் 72 வயது மூதாட்டி, தனது வீட்டின் வாசலில் தவறி விழுந்துள்ளார்.
கடும் பனி கொட்டிக்கொண்டிருந்த அந்த வேளையில் அவரால் அசையவும் முடியாமல், எழுந்திருக்கவும் முடியாமல் அவதிப்பட்டுக்கொண்டிருந்தார்.
அப்போது, அவ்வழியே வந்த Thomas McCafferty எனும் 51 வயது Royal Mail தபால்காரர், மூதாட்டியை பார்த்தார்.
தன்னால் எழுந்து நிற்க முடியாமல் தவித்த அந்த மூதாட்டிக்கு உதவுவதற்குப் பதிலாக, அங்கிருந்து சென்றுவிட்டார்.
பிப்ரவரியில் நடந்த இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் மூதாட்டியின் பக்கத்து வீட்டு வாசலில் இருந்த கேமராவில் பதிவாகியுள்ளது.
ராயல் மெயில் தபால்காரரை உதவி செய்யுமாறு அவர் வேண்டுகோள் விடுத்த போதிலும், 'என்னால் உங்களுக்கு உதவ முடியாது' என்று கூறுவதை அந்த சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளது.
இந்த காட்சிகளை மூதாட்டியின் மருமகள் Sheryl Harkins பின்னர் Facebook-ல் பகிர்ந்துள்ளார்.
அதிர்ஷ்டவசமாக, ஒரு Hermes டெலிவரி டிரைவர் ஒருவர், பக்கத்து வீட்டுக்காரரின் உதவியுடன், மூதாட்டியை காப்பாற்றியுள்ளார்.
ஆனால், மனிதாபிமானம் இன்றி உதவிசெய்யாமல் சென்ற அந்த தபால்காரருக்கு எதிராக கமெண்டுகளும், எதிர்ப்புகளும் குவிந்தன.
இந்நிலையில், Royal Mail நிறுவனம் Thomas McCafferty-ஐ வலையை விட்டு தூக்கியதாகவும், நடந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவிப்பிதாகவும் கூறியுள்ளது.

