ஸ்காட்லாந்தில் இரண்டு ரயில்கள் மோதி விபத்து; பலர் காயம்
ஸ்காட்லாந்தில் இரண்டு ரயில்கள் மோதி விபத்துக்குள்ளானதில் பலர் காயம் அடைந்துள்ளனர்.
ஸ்காட்லாந்தின் ஹைலேண்ட்ஸில் உள்ள அவிமோர் ரயில் நிலையத்தில் வெள்ளிக்கிழமை இரண்டு ரயில்கள் மோதியதில் பலர் காயமடைந்தனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
பிரித்தானிய தலைநகர் லண்டனில் இருந்து வடக்கே 965 கிமீ தொலைவில் உள்ள ரயில் நிலையத்தில் வெள்ளிக்கிழமை இரவு 7:00 மணியளவில் இரண்டு ரயில்கள் மோதிக்கொண்டதாக ரயில்வே தெரிவித்துள்ளது.
நூற்றாண்டு பழமையான பறக்கும் ஸ்காட்ஸ்மேன் ரயில், மணிக்கு 100 மைல் வேகத்தில் பயணித்த முதல் நீராவி ரயில் ஆகும்.
இரண்டு பேர் பலத்த காயங்களுடன் ராய்க்மோர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். காயமடைந்த மேலும் பல பயணிகள் சம்பவ இடத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருவதாக ஸ்காட்லாந்து பொலிஸார் தெரிவித்தனர். விபத்து காரணமாக அவிமோர் நிலையத்திற்கு செல்லும் ரயில் சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. கடந்த காலங்களில், தடம் புரண்டது மற்றும் பாதுகாப்புக் குறைபாடுகளுக்காக UK ரயில் நிறுவனத்திற்கு அதிக அபராதம் விதிக்கப்பட்டது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
Scotland Train crash, Flying Scotsman train