பிளவுபட உள்ள பிரித்தானியா; சுதந்திரம் கோரும் ஸ்காட்லாந்து, வேல்ஸ், வடக்கு அயர்லாந்து
wales scotland ireland leaders meet to break up united kingdom: ஸ்காட்லாந்து, வேல்ஸ், வடக்கு அயர்லாந்து ஆகிய நாடுகளின் முதல் அமைச்சர்கள் பிரித்தானியாவிலிருந்து பிரிந்து செல்வது குறித்து பொது வாக்கெடுப்பு நடத்தும் உரிமையைக் கோரும் ஒரு கூட்டுப் பிரகடனத்தில் கையெழுத்திட உள்ளனர்.
ஸ்காட்லாந்து, வேல்ஸ், வடக்கு அயர்லாந்து முதல் அமைச்சர்கள் சந்திப்பு
இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, வேல்ஸ் மற்றும் வடக்கு அயர்லாந்து ஆகியவற்றை உள்ளடக்கியதாக பிரித்தானியா உள்ளது.
இந்நிலையில், பிரித்தானியாவிலிருந்து ஸ்காட்லாந்து, வேல்ஸ் மற்றும் வடக்கு அயர்லாந்து ஆகியவை பிரிந்து சென்று சுதந்திரம் பெற விரும்புகிறது.
ஸ்காட்லாந்தின் முதல் அமைச்சர் ஜான் ஸ்வினி, வேல்ஸின் முதல் அமைச்சர் ருன் அப் ஐயோவர்த் மற்றும் வடக்கு அயர்லாந்தின் முதல் அமைச்சர் மிஷேல் ஓ'நீல் ஆகியோர் திங்கட்கிழமை வேல்ஸின் கார்டிஃபில் நடைபெறும் உச்சிமாநாட்டில் ஒன்று கூட உள்ளனர்.

இந்த மாநாட்டில், பிரித்தானியாவிலிருந்து பிரிந்து செல்வது குறித்து பொது வாக்கெடுப்பு நடத்தும் உரிமையைக் கோரும் ஒரு கூட்டுப் பிரகடனத்தில் கையெழுத்திட உள்ளனர்.
மேலும், பொருளாதாரம், எரிசக்தி, ஐரோப்பா மற்றும் சர்வதேச விவகாரங்களில் நெருங்கிய ஒத்துழைப்பை நாடும் அதே வேளையில், சுதந்திரம் தொடர்பான ஒரு புதிய அரசியல் பிரச்சாரம் குறித்து விவாதிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ட்ரம்ப் ஆதரவு
பொதுமக்களின் ஆதரவு இருந்தால் ஸ்காட்லாந்து சுதந்திரத்திற்கான பொது வாக்கெடுப்பு நடத்தப்படலாம் என்று பிரித்தானிய பிரதமர் ஆண்டி பர்ன்ஹாம் கூறியதைத் தொடர்ந்து, அவர் மீது அழுத்தத்தை அதிகரிக்கும் நோக்கில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தனது டப்ளின் பயணத்தின்போது, ஒன்றுபட்ட அயர்லாந்தைக் காணத் தாம் விரும்புவதாக கூறியதைத் தொடர்ந்து இந்த சந்திப்பு நடைபெற உள்ளது.
பிரித்தானியாவின் கடைசி பிரதமராக பர்ன்ஹாம்
இது குறித்து பேசிய ஸ்காட்லாந்தின் முதல் அமைச்சர் ஜான் ஸ்வினி, "வரலாற்றிலேயே முதன்முறையாக, ஸ்காட்லாந்து, வேல்ஸ் மற்றும் வட அயர்லாந்து ஆகியவை சுதந்திர ஆதரவு முதல் அமைச்சர்களால் வழிநடத்தப்படுகின்றன.
தற்போதைய நிலை நீடிக்க முடியாதது என்பதற்கும், பிரித்தானியாவின் பிந்தைய எதிர்காலத்திற்கு வெஸ்ட்மின்ஸ்டர் தயாராக வேண்டும் என்பதற்கும் இதைவிடத் தெளிவான அறிகுறி இருக்க முடியாது.

ஆண்டி பர்ன்ஹாம், தான் பிரித்தானியாவின் கடைசிப் பிரதமராக வரலாற்றில் இடம்பிடிப்பார் என்ற எண்ணத்தை இப்போது எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.
நாளை கார்டிஃபிலில், இந்தத் தீவுகள் முழுவதிலுமிருந்து வரும் கூட்டாளிகளுடன் ஒரு சிறந்த எதிர்காலம் குறித்து விவாதிக்க ஆவலுடன் உள்ளேன். அது சுதந்திரத்தின் புதிய தொடக்கத்தால் மட்டுமே சாத்தியமாகும்" என தெரிவித்துள்ளார்.
சாத்தியமற்றது என தெரிவித்துள்ள பர்ன்ஹாம்
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பிரித்தானிய பிரதமர் ஆண்டி பர்ன்ஹாம், அடுத்த பொதுத் தேர்தலுக்கு முன்பு மற்றொரு ஸ்காட்லாந்து சுதந்திரத்திற்கான பொது வாக்கெடுப்பு நடத்துவது சாத்தியமற்றது. ஸ்காட்லாந்தில் ஒரு சுதந்திரப் பொது வாக்கெடுப்புக்கு ஒருமித்த கருத்து இல்லை.

அத்துடன், வடக்கு அயர்லாந்தில் உள்ள பெரும்பான்மையான மக்கள் தற்போது பிரித்தானியாவிலிருந்து பிரிந்து செல்ல விரும்புகிறார்கள் என்று கூறுவதற்கும் தெளிவான அடிப்படை இல்லை" என கூறியுள்ளார்.
பர்ன்ஹாம், ஸ்வினிக்கு அனுப்பிய கடிதத்தில், "தொழிற்கட்சி சுதந்திரத்தையோ அல்லது மற்றொரு பொது வாக்கெடுப்பையோ ஆதரிக்காது என தொழிற்கட்சி தனது 2024 தேர்தல் அறிக்கையில் சந்தேகத்திற்கு இடமின்றித் தெளிவுபடுத்தியுள்ளது.
சமீபத்தில் கிளாஸ்கோவில் நாம் சந்தித்தபோது நான் உங்களிடம் தனிப்பட்ட முறையில் தெளிவுபடுத்தியதைப் போல, சுதந்திரமும் பொது வாக்கெடுப்பும் சாத்தியமற்றவை.
ஏனெனில் அது, பொருளாதாரத்தை மேம்படுத்துவதிலிருந்தும், வாழ்க்கைச் செலவைச் சமாளிக்கக் குடும்பங்களுக்கு உதவுவதிலிருந்தும் நமது கவனத்தைத் திசைதிருப்பிவிடும்" என குறிப்பிட்டுள்ளார்.