இலங்கை, இந்தியர்கள் உட்பட 35 மீனவர்கள்... பிரித்தானிய நிறுவனம் ஒன்றில் அடிமைகளாக வேலை பார்த்த கொடுமை
ஸ்கொட்லாந்தை சேர்ந்த குடும்பம் ஒன்று முன்னெடுக்கும் மீன் பிடி நிறுவனத்திலேயே இலங்கை, இந்தியா உட்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த 35 பேர்கள் அடிமைகளைப் போன்று நடத்தப்பட்டுள்ளனர்.
இந்தியா, இலங்கையை சேர்ந்த 35 பேர்கள்
கடந்த 2012 முதல் 2020 வரையில், பிரித்தானிய உள்விவகார அமைச்சகத்திற்கு தகவல் கிடைக்கும் வரையில் தொடர்புடைய மீனவர்கள் கொடூர சித்திரவதைகளை அனுபவித்துள்ளனர்.
TN Trawlers என்ற அந்த நிறுவனம் Annan நகரில் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்திலேயே பிலிப்பைன்ஸ், கானா, இந்தியா மற்றும் இலங்கையை சேர்ந்த 35 பேர்கள் நவீன அடிமைகளாக நடத்தப்பட்டுள்ளனர்.
ஆனால் இந்த நிறுவனம் தற்போது அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்து வருகிறது. தங்கள் ஊழியர்களை நன்றாக கவனித்துக் கொள்வதாக்வும், உரிய சம்பளம் அளிப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
அனுபவம் வாய்ந்த மீனவர் 28 வயதான Joel Quince தமது வாழ்க்கையே மாறப்போகிறது என்ற நம்பிக்கையில், கடந்த 2012ல் ஹீத்ரோ விமான நிலையத்தில் வந்திறங்கினார். பிலிப்பைன்ஸ் நாட்டவரான ஜோயலுக்கு வாரத்தில் 48 மணி நேரம் வேலை, மாதம் 660 பவுண்டுகள் சம்பளம் என ஒப்பந்தம் செய்துள்ளனர்.
அவரிடம் இருந்து ஆவணங்கள் மொத்தமும் கைப்பற்றிய பின்னர் மீன் பிடி தளத்திற்கே அழைத்துச் சென்றுள்ளனர். அங்கே அவருக்கு முதல் அதிர்ச்சி காத்திருந்துள்ளது. Mattanja படகில் வேலைக்கு என அழைத்து வரப்பட்ட அவரை Philomena படகில் வேலைக்கு கட்டாயப்படுத்தியுள்ளனர்.
நாளுக்கு 18 மணி நேரம் வேலை
அடுத்த அதிர்ச்சியாக நாளுக்கு 18 மணி நேரம் வேலை என்றும் வாரத்தில் 7 நாட்களும் வேலை செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளனர். அத்துடன், மாத சம்பளம் 637 பவுண்டுகள் என்றும் கூறியுள்ளனர்.
அதாவது பிரித்தானியாவில் அமுலில் இருக்கும் குறைந்தபட்ச சம்பளத்தை விடவும் குறைவு. 2011 மற்றும் 2013ல் பல்வேறு நாடுகளில் இருந்து TN Trawlers என்ற அந்த நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்த சுமார் 30 மீனவர்களில் ஜோயலும் ஒருவர்.
நாளுக்கு 18 மணி நேரம் வேலை என்பதாலும் போதிய ஓய்வு இல்லை என்பதாலும் கடுமையாக அவதிப்பட்டதாக ஜோயல் தெரிவித்துள்ளார். அவர் மட்டுமல்ல, அவருடன் பணியாற்றும் அனைவரின் நிலையும் மிக மோசமாகவே இருந்துள்ளது.
மீன் பிடி படகில் போதிய உணவு, குடிநீர் வழங்கப்படுவதில்லை என்பதுடன், போதிய உடைகளும் அளிக்கப்படவில்லை என்றே அனைவரும் குறிப்பிட்டுள்ளனர். மீன் பிடிக்க செல்லாத நாட்களில், உரிமையாளர் Tom Nicholson என்பவரின் குடியிருப்பில் தோட்ட வேலைகளுக்கு மீனவர்களை பயன்படுத்தியுள்ளனர்.
வழக்கு கைவிடப்பட்டது
TN Trawlers நிறுவனத்திற்கு எதிராக பல்வேறு புகார்கள் அளிக்கப்பட்டுள்ளதை அடுத்து பிரித்தானிய பொலிசார் கண்காணித்து வந்துள்ளனர். மட்டுமின்றி 2007ல் சட்டவிரோதமாக பல நூறாயிரம் பவுண்டுகள் மதிப்பிலான மீன் பிடித்த வழக்கில் சிக்கிய இந்த நிறுவனம் 473,000 பவுண்டுகள் தொகையை திருப்பிச் செலுத்த தீர்ப்பானது.
மேலும், 2009 முதல் 2011 வரையான காலகட்டத்தில் பாதுகாப்பு மீறல் காரணமாக சுமார் 150,000 பவுண்டுகள் அபராதமும் விதிக்கப்பட்டது. 2012ல் TN Trawlers படகில் இருந்து குதித்து வெளியேறிய 6 பிலிப்பைன்ஸ் மீனவர்கள் பொலிசாரிடம் புகார் அளித்தனர்.
மட்டுமின்றி, பிரித்தானிய உள்விவகார அமைச்சகத்தால் ஜோயல் உட்பட 18 மீனவர்கள் அடையாளம் காணப்பட்டு, அடிமைகளாக நடத்தப்பட்டவர்கள் என பட்டியலிடப்பட்டனர்.
மட்டுமின்றி, இந்தியரான விஷால் உட்பட மொத்தம் 35 பேர்கள் இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவர்கள் பட்டியலில் இடம்பெற்றனர். ஆனால் நீண்ட 5 ஆண்டுகள் நீடித்த இந்த வழக்கில், சிலர் சந்தேக நபர்களை அடையாளம் காண தவறியதை அடுத்து, TN Trawlers நிறுவனம் மீதான வழக்கு கைவிடப்பட்டது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |