உக்ரைனில் மருத்துவ சேவையாற்றிய ஸ்காட்டிஷ் வீரர் உயிரிழப்பு: தகவல் உறுதிப்படுத்திய குடும்பத்தினர்
உக்ரைன் போரில் ஈடுபட்டு வந்த ஸ்காட்லாந்து வீரர் உயிரிழந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்காட்டிஷ் வீரர் உயிரிழப்பு
ஹைலேண்ட்ஸில்(Highlands) உள்ள ஆர்ட்நாமர்ச்சானை(Ardnamurchan) சேர்ந்த 26 வயதான ஸ்காட்டிஷ் வீரர் ஜோர்டான் மக்லாக்லான்(Jordan Maclachlan), கடந்த வெள்ளிக்கிழமை உக்ரைனிய ராணுவத்தில் மருத்துவராக பணியாற்றிய போது துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்தார்.
மக்லாக்லானின் குடும்பம் அவரது மறைவை உறுதிப்படுத்தியதுடன், அவரது தன்னலமற்ற சேவையின் மீதான பெருமையை வெளிப்படுத்தியுள்ளனர்.
இது தொடர்பாக அவர்களின் அறிக்கையில், ஜோர்டான் தான் ஒரு நல்ல விளைவை ஏற்படுத்திக் கொண்டிருப்பதாக உறுதியாக நம்பினார், மற்றவர்களுக்கு உதவுவதற்காக அவர் தன்னை அர்ப்பணித்துக் கொண்டதில் நாங்கள் பெருமை கொள்கிறோம்.
அவரது இழப்பு குறித்த தகவல் மிகவும் குறைவாக இருப்பதால் வெளியுறவு அலுவலகத்திடமிருந்து மேலும் விவரங்களை நாங்கள் எதிர்பார்த்துள்ளோம் எனத் தெரிவித்துள்ளனர்.
வெளியுறவு, காமன்வெல்த் மற்றும் மேம்பாட்டு அலுவலகத்தின் செய்தித் தொடர்பாளர், மக்லாக்லானின் குடும்பத்திற்கு ஆதரவளித்து வருவதாகவும், உள்ளூர் அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு வருவதாகவும் உறுதிப்படுத்தினார்.
துரதிர்ஷ்டவசமாக, உக்ரைனில் போரிட்டு உயிரிழந்த முதல் பிரிட்டிஷ் குடிமகன் மக்லாக்லான் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |