பிரித்தானிய பாடகிக்கு தன்பாலின ஈர்ப்பாளருடன் நிச்சயதார்த்தம்! வெளியிட்ட புகைப்படம்
கணவரை பிரிந்த பாடகி எமிலி சண்டே தனது தோழியுடன் திருமண நிச்சயம் முடிந்துவிட்டதாக அறிவித்துள்ளார்
இந்த உறவில் முன்பை விட மகிழ்ச்சியாக இருப்பதாக எமிலி நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார்
ஸ்கோட்டிஷ் பாடகி எமிலி சண்டே தனது காதலியுடன் திருமண நிச்சயம் முடிந்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவைச் சேர்ந்த 35 வயதாகும் எமிலி சண்டே ஸ்கோட்டிஷ் பாடகியாக உள்ளார். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு LGBT சமூகத்தின் ஒரு பகுதியாக இருப்பதாக கூறிய எமிலி, ஒரே பாலின உறவில் யோனா கரேமோவா என்ற பெண்ணுடன் இருப்பதாக தெரிவித்தார்.
@Mattpapz/Backgrid
இந்த நிலையில் அவர் தனது காதலியுடன் திருமண நிச்சயம் முடிந்துவிட்டதாக மோதிரம் ஒன்றை அணிந்த புகைப்படத்தை பதிவிட்டு வெளிப்படுத்தியுள்ளார். Adam Gouraguine என்பவரை திருமணம் செய்துகொண்ட எமிலி, 2014ஆம் ஆண்டு அவரை பிரிந்தார்.
@Shutterstock
அதன் பின்னர் அவர் தனது தோழியுடன் இருப்பதாக கூறியதால், எமிலி தன்னை இருபாலினமாக கருதுகிறாரா என்று கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த எமிலி,
'நான் என்னவாக அடையாளம் காண்கிறேன் என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் என்னை யார் காதலிக்கிறாரோ அவரை காதலிக்க வேண்டும் என்று தான் உணர்கிறேன்' என தெரிவித்தார்.
தனது காதல் குறித்து அவர் கூறுகையில், 'காதலில் இருப்பது மிகவும் நன்றாக இருக்கிறது. முன்பை விட மகிழ்ச்சியாக உணர்கிறேன். உங்கள் அன்பு மற்றும் ஆதரவான அனைத்து குறுந்தகவல்களும் என் மனதை தொட்டன. உங்கள் வரவேற்புக்கும், அன்பான வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி' என தெரிவித்துள்ளார்.
@Instagram