கிரீஸ் சூட்கேசில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட பிரித்தானிய பெண்: சர்வதேச விசாரணை தீவிரம்
ஏதென்ஸில் சூட்கேஸில் பிரித்தானிய பெண் ஒருவர் சடலமாக கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சூட்கேஸில் பிரித்தானிய பெண்
கிரீஸ் தலைநகர் எதென்ஸில் உள்ள பழமையான கட்டிடம் ஒன்றில் இருந்த சூட்கேஸில் ஸ்காட்லாந்தை சேர்ந்த பெண்ணின் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் ஊடகங்கள் வழங்கிய தகவலின் படி, சூட்கேஸில் அடைத்து வைக்கப்பட்டிருந்த பெண் சடலம் 38 வயது எலிசபெத் என்பவருடையது என தெரியவந்துள்ளது.
இதனை பிரித்தானியாவின் காமன்வெல்த் மற்றும் மேம்பாட்டு அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது.

மற்றும் இந்த சம்பவம் தொடர்பாக கிரீஸ் நாட்டு அதிகாரிகளும், இண்டர்போல் மற்றும் ஸ்காட்லாந்து காவல் துறையினரும் இணைந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாதிக்கப்பட்ட பெண் சைப்ரஸ் வழியாக அமெரிக்காவில் இருந்து கிரீஸுக்கு வந்து இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
மரணத்திற்கான உண்மையான காரணத்தை கண்டறிய, கொலை செய்யப்பட்ட பெண் கடைசியாக எங்கு சென்றார் என்பது போன்ற விவரங்களை அதிகாரிகள் சேகரித்து வருகின்றனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |