உடைமைகள் அனைத்தையும் விற்ற பிரித்தானிய பெண்: கன்டெய்னரில் வாழ்க்கை..கூறும் காரணம்
ஸ்கொட்லாந்தைச் சேர்ந்த பெண்ணொருவர் தனது உடைமைகளை அனைத்தையும் விற்று கன்டெய்னரில் வாழத் தொடங்கிவிட்டார்.
வாடகை இல்லாமல் வாழ
ராபின் ஸ்வான் என்ற ஸ்கொட்லாந்தைச் சேர்ந்த 33 வயது பெண், தனது வீட்டை விட்டு வெளியேறி கிராமப்புறத்தில் வாழ முடிவு செய்தார்.
வாழ்க்கைச் செலவு நெருக்கடி தொடர்ந்து அதிகரித்து வரும் சூழலில், வாடகை இல்லாமல் வாழ வேண்டும் என ஸ்வான் கன்டெய்னரை தேர்தெடுத்தார்.
தனது உடைமைகள் அனைத்தையும் விற்ற அவர், Stirling அருகே ஏழு ஏக்கர் நிலத்தை 185,000 பவுண்டுக்கு வாங்கினார்.
பின்னர் 4,200 பவுண்ட் செலவில் 40 க்கு 8 என்ற அளவிலான கொள்கலனை சேர்த்துக் கொண்டார். முதல் 8 மாதங்கள் மின்சாரம் இல்லாமல் இருந்ததால், ஸ்வானால் 4,500 பவுண்ட்கள் சேமிக்க முடிந்தது.
எனினும், அவர் சோலார் பேனல் அமைப்பு நிறுவப்படும் வரை பேட்டரி மின்சாரத்தைப் பயன்படுத்தியிருக்கிறார்.
கேரவனை விட மிகவும் வசதியானது
அத்துடன் தனக்கான உணவை தானே தயார் செய்துகொண்ட அவர் கோழிகள், முயல்கள் மற்றும் பன்றிகள் உட்பட விலங்குகளை வளர்க்கத் தொடங்கியதுடன், மழைநீரை சேகரித்து தண்ணீரையும் தயார்படுத்திக்கொண்டார்.
எப்போது நாய்களுடன் உலா வரும் ஸ்வான் கூறுகையில், "கன்டெய்னர் இப்போது முழு வீடாக மாறியுள்ளது. எனக்கு என்ன வகையான Insulation மற்றும் double glazing தேவை என்பதை நான் தேர்ந்தெடுத்தேன், எனவே அது ஒரு கேரவனை விட மிகவும் வசதியானது. நான் வீட்டில் வாசிக்க ஒரு மாதத்திற்கு 1000 பவுண்டுகளுக்கும் மேல் செலவழித்தேன். அதனால் ஒரு மாதத்திற்கு 750 பவுண்டுகள் சேமிக்கிறேன்; அது நிலத்திற்கு திரும்புகிறது" என்றார்.
மேலும் அவர் கூறுகையில், "கோடையின் இறுதிக்குள் நாங்கள் எங்கள் சொந்த இறைச்சி மற்றும் காய்கறிகளை உற்பத்தி செய்வோம் என்று நம்புகிறேன். நாங்கள் ஒரு சந்தைத் தோட்டத்தை உருவாக்கி, எங்கள் உணவை மீண்டும் பொதுமக்களுக்கு விற்க முடியும் என நம்புகிறேன்" என்றார்.
இது நல்ல வாழ்க்கையா என்று ஸ்வானிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "இது உடலை மிகவும் பாதிக்கிறது, ஆனால் என்னால் முடிந்தவரை off-grid ஆக வாழ விரும்புகிறேன். இது மன அமைதியை அளிக்கிறது. உலகில் ஏதாவது நடந்தால், எனக்கோ அல்லது என் குடும்பத்திற்கோ உணவுப் பற்றாக்குறை இருக்காது என்பது எனக்குத் தெரியும்.
நான் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை வாழவும், எனது சொந்த உணவை உற்பத்தி செய்யவும் விரும்பினேன். இந்த வழியில் அதில் என்ன நடக்கிறது என்பதை நான் சரியாக அறிவேன்" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |