நிகழ்ச்சி ஒன்றில் பல பெண்களின் குழந்தைகள் ஒரே மாதிரி இருந்ததால் ஏற்பட்ட சந்தேகம்: தாய்மார்களுக்கு தெரியவந்த அதிர்ச்சியளிக்கும் உண்மை
அவுஸ்திரேலியாவில், புதிதாக பிறந்த குழந்தைகளுக்கான நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற தாய்மார்கள் பலர், தங்கள் குழந்தைகள் எல்லாரும் ஒரே மாதிரி இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்கள்.
புதிய தாய்மார்கள் கலந்துகொண்ட நிகழ்ச்சி
புதிதாக தாயான பல பெண்கள், தங்களுக்கான சிறப்பு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுள்ளார்கள்.
அப்போது, பலரது குழந்தைகள் ஒரே மாதிரி இருந்ததால் அவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
அந்த தாய்மார்கள், உயிரணு தானம் மூலம் குழந்தை பெற்றவர்கள். ஆகவே, ஏதோ தவறு நடந்துள்ளதை அறிந்த அவர்கள், செயற்கை கருவூட்டல் மையத்தில் விசாரித்துள்ளார்கள்.
Image: Getty Images / OJO images
தெரியவந்த அதிர்ச்சியளிக்கும் உண்மை
நடந்தது என்னவென்றால், ஒரு நபர் வெவ்வேறு மையங்களில், வெவ்வேறு பெயர்களில் உயிரணு தானம் செய்துள்ளார். உயிரணு தானம் பெற்ற பலர், தாங்கள் ஒரே நபரிடம் உயிரணு தானம் பெற்றுள்ளோம் என்பது தெரியாமலே செயற்கை முறையில் கருத்தரித்துள்ளார்கள்.
அந்த நபர் உண்மையை மறைத்து சுமார் 60 குழந்தைகளுக்குத் தந்தையாகியுள்ளார்.
ஆகவேதான் தங்கள் குழந்தைகள் ஒரே மாதிரி இருக்கிறார்கள் என்பது தெரிந்ததும், அந்தப் பெண்கள் அடைந்த அதிர்ச்சி கூடுதலாகிவிட்டது.
இன்னொரு விடயம், அந்த நபர் உயிரணு தானம் கொடுத்த பெண்களிடமிருந்து பரிசுகள் வாங்கியுள்ளார்.
அவுஸ்திரேலியாவில், உயிரணு தானம் கொடுப்பதற்காக பணமோ அல்லது பரிசுகளோ பெறுவது சட்டப்படி குற்றமாகும். அதற்கு 15 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
Image: Getty Images/iStockphoto