அவுஸ்திரேலியாவை கதிகலங்க வைத்த இருவர்! பறந்த பைல்ஸ்.. சுருண்ட அணி (வீடியோ)
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்டின் முதல் இன்னிங்சில் அவுஸ்திரேலிய அணி 180 ஓட்டங்களுக்கு சுருண்டது.
அவுஸ்திரேலியா தடுமாற்றம்
அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் நேற்று தொடங்கியது.
Jayden Seales Steals the Show 🔥
— FanCode (@FanCode) June 25, 2025
A ruthless spell ends Australia’s innings at 180 💥#WIvAUS pic.twitter.com/iGlX5b3I1R
நாணய சுழற்சியில் வென்ற அவுஸ்திரேலியா முதலில் துடுப்பாடியது. சாம் கொன்ஸ்டாஸ் (3), கேமரூன் கிரீன் (3) அடுத்தடுத்து ஷாமர் ஜோசப் பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர்.
பின்னர் வந்த இங்கிலீஸை 5 ஓட்டங்களில் சீல்ஸ் வெளியேற்றினார். உஸ்மான் கவாஜா, டிராவிஸ் ஹெட் கூட்டணி ஓட்டங்கள் சேர்த்தது.
ஆனால் ஷாமர் ஜோசப் (Shamar Joseph) 47 ஓட்டங்களில் இருந்த கவாஜாவை அவுட் செய்ய, சீட்டுக்கட்டு போல் விக்கெட்டுகள் சரிந்தன.
அரைசதம் விளாசிய டிராவிஸ் ஹெட் (Travis Head) 59 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, அணித்தலைவர் கம்மின்ஸ் அதிரடியாக 18 பந்துகளில் 28 ஓட்டங்கள் விளாசினார்.
ஜேடன் சீல்ஸ்
கடைசி 3 விக்கெட்டுகளை ஜேடன் சீல்ஸ் (Jayden Seales) கைப்பற்ற, அவுஸ்திரேலியா அணி 180 ஓட்டங்களுக்கு சுருண்டது.
சீல்ஸ் மூன்றாவது முறையாக 5 விக்கெட்டுகளை கைப்பற்ற, ஷாமர் ஜோசப் 4 விக்கெட்டுகளும், ஜஸ்டின் கிரேவ்ஸ் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
He just keeps going! UNPLAYABLE!🤯 #WIvAUS | #FullAhEnergy pic.twitter.com/TgaQCwvBmM
— Windies Cricket (@windiescricket) June 25, 2025
பின்னர் களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் முதல் நாள் முடிவில் 4 விக்கெட்டுக்கு 57 ஓட்டங்கள் எடுத்தது. பிரண்டன் கிங் 23 ஓட்டங்களுடனும், ரஸ்டன் சேஸ் 1 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |