ஆரம்பத்திலேயே பாகிஸ்தானுக்கு அதிர்ச்சி கொடுத்த ஒற்றை வீரர்! அடுத்தடுத்து சரிந்த விக்கெட்டுகள்
முல்தான் டெஸ்டில் சீல்ஸ் அடுத்தடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றி பாகிஸ்தான் அணிக்கு அதிர்ச்சி கொடுத்தார்.
சீல்ஸ் மிரட்டல்
பாகிஸ்தான் மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் இன்று முல்தானில் தொடங்கியுள்ளது.
மோசமான வானிலை காரணமாக ஆட்டம் தொடங்க தாமதமானது. பின்னர் பாகிஸ்தான் அணி நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பாட்டத்தை தொடங்கியது.
முகமது ஹுரைரா 6 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஜேடென் சீல்ஸ் (Jayden Seales) பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
அடுத்து அணித்தலைவர் ஷான் மசூட் (Shan Masood) 11 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, கம்ரான் குலாமை 5 ஓட்டங்களில் வேகப்பந்து வீச்சாளர் சீல்ஸ் அவுட்டாக்கினார்.
ஷகீல், ரிஸ்வான் கூட்டணி
அதன் பின்னர் சீல்ஸ் நட்சத்திர வீரர் பாபர் அசாமை (Babar Azam) வெளியேற்றினார். இதனால் பாகிஸ்தான் அணி 46 ஓட்டங்களுக்கு 4 விக்கெட் என தடுமாறியது.
எனினும் சவுட் ஷகீல் மற்றும் முகமது ரிஸ்வான் கூட்டணி அமைத்தனர். நிதானமாக ஆடிய இந்த கூட்டணி அணியின் ஸ்கோரை மெல்ல மெல்ல உயர்த்தியது.
முதல் நாள் ஆட்டநேர முடிவில் பாகிஸ்தான் 143 ஓட்டங்கள் எடுத்துள்ளது. ஷகீல் 56 ஓட்டங்களுடனும், ரிஸ்வான் 51 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |