சின்னத்தை அறிவிக்கும்போது திடீரென ஒலித்த அந்த பாடல்- கடுப்பான சீமான்
நாம் தமிழர் கட்சி சார்பில் இன்று சீமான் கட்சியின் சின்னத்தை அறிவிக்கும்போது திடீரென ரத்தக் கொதிப்பு பாடல் ஒலித்ததால் சீமான் கோபமடைந்தார்.
நாம் தமிழர் கட்சி
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பாராளுமன்ற தேர்தலில், ஏற்கனவே தங்கள் கட்சி பயன்படுத்திய கரும்பு விவசாயி சின்னத்தை தரும்படி, தலைமை தேர்தல் ஆணையத்திடம் கேட்டார்.
ஆனால் அந்த சின்னம் கர்நாடகாவை சேர்ந்த ஒரு கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. இதையடுத்து கரும்பு விவசாயி சின்னத்தை கேட்டு சுப்ரீம் கோர்ட்டில் நாம் தமிழர் கட்சி சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்நிலையில், நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னம் ஒதுக்கப்பட்டது. அதனையும் அவர்கள் ஏற்க மறுத்துவிட்டனர்.
அதற்கு பதிலாக படகு, கப்பல் அல்லது தீப்பெட்டி சின்னங்களில் ஏதேனும் ஒன்றை தங்கள் கட்சிக்கு வழங்கும்படி தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைத்தனர்.
நாம் தமிழர் கட்சியின் கோரிக்கையை, தேர்தல் கமிஷன் நிராகரித்து, "மைக்" சின்னம் தான் என்பதை தேர்தல் ஆணையம் உறுதி செய்துள்ளது.
சின்னத்தை அறிவித்த சீமான்
இந்நிலையில் நாம் தமிழர் கட்சி "மைக்" சின்னத்தில் போட்டியிடும் என்று சீமான் இன்று அறிவித்தார்.
அதன்படி, சென்னையில் சீமான் மைக் சின்னத்தை அறிமுகப்படுத்தி பேசத் தொடங்கினார்.
அப்பொழுது, சீமானின் பின்னால் நின்றிருந்த ஒருவரின் செல்போன் ரிங்டோன், "ரத்த கொதிப்பு எங்க மாமனாருக்கு ரத்த கொதிப்பு" என்ற பாடலுடன் சப்தமாக ஒலித்தது.
இதனால் சீமான் உள்ளிட்ட நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் மிகவும் கோபமடைந்ததால் அந்த நபர் உடனே அங்கிருந்து வெளியேறினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |