41 பந்துகளில் 110 ஓட்டங்கள்! வாணவேடிக்கை காட்டிய வீரரால் அதிர்ந்த மைதானம்
டி20 பிளாஸ்ட் தொடரில் சர்ரே அணி வீரர் சியான் அபோட் 41 பந்துகளில் 11 சிக்ஸர்களுடன் 110 ஓட்டங்கள் விளாசினார்.
அனல் பறந்த அபோட்டின் ஆட்டம்
லண்டனின் கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் நேற்று நடந்த போட்டியில், சர்ரே (Surrey) மற்றும் கென்ட் (Kent) அணிகள் மோதின.
முதலில் ஆடிய சர்ரே 5 விக்கெட் இழப்புக்கு 223 ஓட்டங்கள் குவித்தது. தொடக்கத்தில் விக்கெட்டுகள் அடுத்தடுத்து சரிந்த நிலையில், 4வது விக்கெட்டுக்கு களமிறங்கிய சியான் அபோட் ருத்ர தாண்டவம் ஆடினார்.
@surreycricket (Twitter)
சிக்ஸர்களை பறக்கவிட்டு வாணவேடிக்கை காட்டிய அவர் 41 பந்துகளில் 110 ஓட்டங்கள் விளாசினார். இதில் 11 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகள் அடங்கும். கென்ட் அணியின் தரப்பில் ஹோகன், லிண்டே, கேன் ரிச்சர்ட்ஸன் மற்றும் ஸ்டீவர்ட் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
சர்ரே அணி வெற்றி
பின்னர் ஆடிய கென்ட் அணி 7 விக்கெட் இழப்புக்கு 182 ஓட்டங்களே எடுத்ததால், சர்ரே 41 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக தவன்டா முயேயே 59 ஓட்டங்களும், டேனியல் பெல் 52 ஓட்டங்களும் எடுத்தனர்.
சுனில் நரைன், டாம் லவ்ஸ் மற்றும் வில் ஜேக்ஸ் தலா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர். சதம் விளாசிய அபோட் ஆட்டநாயகன் விருது பெற்றார்.
@surreycricket (Twitter)