கனடாவில் காணாமல் போன ஷாலினி சிங்! குப்பை கிடங்கை குறிவைத்துள்ள பொலிஸார்!
கனடாவில் காணாமல் போன பெண்ணை தேடி ஹாமில்டன் குப்பை கிடங்கில் பொலிஸார் தீவிர தேடுதல் வேட்டையை தொடங்கியுள்ளனர்.
குப்பை கிடங்கில் தேடுதல் வேட்டை
டிசம்பர் மாத தொடக்கத்தில் காணாமல் போன 40 வயது ஷாலினி சிங்(Shalini Singh) என்ற பெண்ணை தேடும் பணியை ஹாமில்டன்(Hamilton) காவல்துறை தீவிரப்படுத்தியுள்ளது.
அவரது உடலை பற்றிய முக்கிய தடயங்கள் கிளான்புரூக்(Glanbrook) குப்பை கிடங்கில் இருக்கலாம் என்ற நம்பிக்கையில், கொலை பிரிவு அதிகாரிகள் அங்கு தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.
காணாமல் போன பெண்
ஷாலினி சிங் டிசம்பர் 4-ஆம் திகதி கடைசியாக தொடர்பு கொள்ளப்பட்டுள்ளார், இதையடுத்து அவரை தொடர்பு கொள்ள முடியாமல் போனதால் கவலை அடைந்த குடும்பத்தினர் ஆறு நாட்களுக்குப் பிறகு அவரை காணவில்லை என்று பொலிஸாரிடம் புகார் அளித்துள்ளனர்.
இந்த விசாரணை முதலில் ஷாலினி சிங் மற்றும் அவரது காதலன் ஆகிய இருவரையும் காணவில்லை என்ற இரட்டை வழக்கின் அடிப்படையில் தொடங்கியது.
ஆனால் டிசம்பர் 11-ஆம் திகதி ஹாமில்டனுக்கு வெளியே உள்ள குடும்பத்தினரை சந்தித்த பிறகு காதலன் கண்டுபிடிக்கப்பட்டார்.
காதலன் கண்டுபிடிக்கப்பட்ட போதிலும், அவர் ஷாலினி சிங்கை கண்டுபிடிப்பதற்கு உதவ எந்த தகவலையும் வழங்கி விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என கூறப்படுகிறது.
ஷாலினி சிங் அவரது அடுக்குமாடி குடியிருப்பில் கொல்லப்பட்டு, அவரது உடல் கட்டிடத்தின் குப்பை அமைப்பு மூலம் அகற்றப்பட்டிருக்கலாம் என்ற புலனாய்வாளர்களின் சந்தேகித்ததை அடுத்து கிளான்புரூக் குப்பை கிடங்கை தேட முடிவு செய்யப்பட்டது.
தேடல் பல வாரங்கள் தொடரலாம்!
குப்பை கிடங்கில் விரிவான தேடுதல் பிப்ரவரி 24-ஆம் திகதி தொடங்கியது மற்றும் பல வாரங்களுக்கு தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
காவல்துறை இந்த நடவடிக்கையை "முறையானது" என்று விவரித்துள்ளது மற்றும் தளத்தில் உள்ள பெரிய காவல்துறை இருப்பு உள்ளூர் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தாது என்று பொதுமக்களுக்கு உறுதியளித்துள்ளது.
அதே சமயம் ஷாலினி சிங் காணாமல் போனது குறித்து தகவல் தெரிந்தவர்கள் முன்வர வேண்டும் என்று அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |