கழிவறை இருக்கையில் பேப்பர் வைத்து பயன்படுத்தக் கூடாது! ஏன் தெரியுமா?
நமது வீட்டில் உள்ள கழிவறைகளை குடும்பத்தினர் மட்டுமே பயன்படுத்துவார்கள்.
அதுவே வேறு வீடு, அலுவலகம், மால் போன்ற வெளி பொது இடங்களில் இருக்கும் கழிவறைகளை பயன்படுத்தும் போது, எத்தனை பேர் பயன்படுத்தினார்களோ என்ற அசௌகரியம் இருக்கும்.
பெரும்பாலும் இன்று வீடுகள் மட்டுமின்றி, பொது இடங்களிலும் வெஸ்டர்ன் மொடல் கழிவறை தான் பயன்பாட்டில் அதிகம் இருக்கின்றன. இங்கு கழிவறை பயன்படுத்தும் போது பலர் கழிவறை பேப்பரை இருக்கயில் படர வைத்து பயன்படுத்துவார்கள்.

theasianparent
இம்முறை சுகாதாரமானது அல்ல என நிபுணர்கள் கூறுகின்றனர். கழிவறை இருக்கையில் நம் தோல் பட்டாலே தொற்று ஏற்பட்டுவிடும் என்ற அச்சத்தில் தான் பலர் பேப்பரை பயன்படுத்துகின்றனர்.
ஆனால், உண்மையில் இதன் காரணத்தால் தான் கிருமிகள் தொற்று அதிகரிக்கின்றன. ஆம், வெஸ்டர்ன் கழிவறை இருக்கைகள் பொதுவாகவே பாக்டீரியா அதிகம் பரவாத வண்ணம் தான் தயாரிக்கப்படுகின்றன.
ஆனால், நாம் அதன் மீது நாம் படர்த்தும் பேப்பரானது எளிதாக பாக்டீரியாக்களை ஈர்க்கும் தன்மை கொண்டுள்ளது என்பதை மறவாதீர்கள்.
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                                 
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        