டிஜிட்டல் தங்கத்தில் முதலீடு செய்வதில் அபாயம்-SEBI எச்சரிக்கை
இந்திய பங்கு சந்தை ஒழுங்குமுறை ஆணையமான செபி (SEBI), டிஜிட்டல் தங்கம் அல்லது e-gold தயாரிப்புகளில் முதலீடு செய்வது தொடர்பாக பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
சில ஆன்லைன் தளங்கள், இது ஒரு எளிய மாற்று வழியாக இருப்பதாக விளம்பரப்படுத்தி வருகின்றன.
ஆனால், இவை செபி ஒழுங்குபடுத்தும் வரம்பிற்குள் வராததால், முக்கிய பாதுகாப்பு அம்சங்கள் இல்லாததாகவும், முதலீட்டாளர்கள் அபாயத்திற்கு உள்ளாகலாம் என்றும் செபி தெரிவித்துள்ளது.
இத்தகைய டிஜிட்டல் தங்க தயாரிப்புகள் செபி ஒழுங்குபடுத்தும் தங்க ETF-க்கள், கமாடிட்டி டெரிவேட்டிவ் ஒப்பந்தங்கள், மற்றும் Electronic Gold Receipts போன்றவற்றிலிருந்து முற்றிலும் வேறுபட்டவை.

இவை சர்வதேச சந்தை ஒழுங்குமுறை அல்லது பங்குச் சந்தை பாதுகாப்பு சட்டங்கள் மூலம் பாதுகாக்கப்படுவதில்லை என செபி விளக்கமளித்துள்ளது.
முதலீட்டாளர்கள், செபியால் ஒழுங்குபடுத்தப்பட்ட தங்க தயாரிப்புகள் மூலம் தங்கத்தில் முதலீடு செய்யலாம்.
இவை மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள், பங்குச் சந்தைகள் மற்றும் பதிவுசெய்யப்பட்ட இடைநிலையர்கள் மூலம் வழங்கப்படுகின்றன.
இந்த எச்சரிக்கை, பாதுகாப்பற்ற முதலீடுகளிலிருந்து பொதுமக்களை பாதுகாக்கும் நோக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. முதலீட்டாளர்கள், எந்தவொரு தயாரிப்பிலும் முதலீடு செய்வதற்கு முன், அதன் ஒழுங்குமுறை நிலையை உறுதிப்படுத்த வேண்டும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
SEBI digital gold warning 2025, risks of investing in e-gold India, SEBI unregulated gold schemes, digital gold vs gold ETFs SEBI, SEBI investor protection alert, mutual fund gold ETF India, electronic gold receipts SEBI, SEBI guidelines gold investment, online platforms promoting e-gold, SEBI regulated gold products