பிரித்தானியாவில் காரில் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட முதியவர்: 2வது நபரை கைது செய்த பொலிஸார்!
பிரித்தானியாவின் ஓல்ட்ஹாம் கடத்தல் வழக்கில் இரண்டாவது நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கண்மூடித்தனமாக தாக்கப்பட்ட மூதாட்டி
பிரித்தானியாவின் ஓல்ட்ஹாமில்(Oldham) முதியவர் ஒருவர் கடத்தி தாக்கப்பட்டது தொடர்புடைய வழக்கில் இரண்டாவது நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவத்தில் 87 வயதான முதியவர் கருப்பு காரில் இழுத்துச் செல்லப்பட்டு, மேற்கு யார்க்ஷயரை சுற்றி திரிந்த போது கண்மூடித்தனமாக தாக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் ஓல்ட்ஹாமின் லீ தெரு(Lee Street) பகுதியில் ஞாயிறு மாலை 9 மணி முதல் 9.30 மணி வரை நடந்துள்ளது.
வீட்டிற்கு நடந்து செல்லும் போது காரில் கடத்தப்பட்ட முதியவர், கண்மூடித்தனமாக தாக்கப்பட்டு பின்னர் அவரது வீட்டில் இருந்து பல மைல்கள் தொலைவில் தள்ளி விடப்பட்டுள்ளார்.
இரண்டாவது நபர் கைது
இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக 39 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் 24 வயதுடைய இரண்டாவது நபர் ஞாயிறுக்கிழமை காலை கடத்தல் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டார்.
பாதிக்கப்பட்டவர் பணம் மற்றும் தனிப்பட்ட பொருட்களுக்காக குறிவைக்கப்பட்டதாக பொலிஸார் நம்புகின்றனர்.
இந்த சம்பவம் சமூகத்தில் அச்சத்தை ஏற்படுத்தக் கூடும் என்றாலும், இது தனிமைப்படுத்தப்பட்ட சம்பவம் என்று பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |