அந்த இளைஞர் ஆபத்தானவர்! யாரும் அவரை அணுக வேண்டாம்... கனடா பொலிசார் எச்சரிக்கை
கனடாவில் இளம்பெண் வீட்டில் இறந்த சம்பவம் ஒரு கொலை என தெரிவித்துள்ள பொலிசார் அதில் தொடர்புடைய நபர் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
எட்மண்டனில் உள்ள ஒரு வீட்டுக்கு அவசர அழைப்பின் பேரில் பொலிசார் இரவு 8 மணிக்கு சென்றனர். அப்போது வீட்டுக்குள் 31 வயது இளம்பெண் காயங்களுடன் உயிருக்கு போராடியபடி கிடந்தார்.
அப்பெண்ணுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும் அங்கேயே உயிரிழந்தார். இந்த நிலையில் உயிரிழந்த பெண் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
மேலும் இது தொடர்பில் Donny Nathan Meeches (31) என்ற இளைஞன் மீது இரண்டாம் நிலை கொலைக் குற்றச்சாட்டை பொலிசார் முன் வைத்துள்ளனர். கொல்லப்பட்ட பெண்ணும் Donnyம் ஒருவருக்கொருவர் நன்கு அறிமுகமானவர்கள் என தெரியவந்துள்ளது.
Source: EPS
மேலும் Donny குறித்த சில முக்கிய தகவல்களை பொலிசார் வெளியிட்டுள்ளனர். அதன்படி, Donny ஆபத்தானவர் எனவும், அவரை யாரும் அணுக வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பழுப்பு நிற கண்கள் மற்றும் கருப்பு முடி கொண்ட Donnyன் உயரம் 5'10 எனவும், எடை 175 பவுண்டுகள் எனவும் பொலிசார் தெரிவித்துள்ளனர். மேலும் அவரது முகம், கழுத்து, கைகள் மற்றும் கைகளில் குறிப்பிடத்தக்க பச்சை குத்தியிருக்கிறார் எனவும் கூறப்பட்டுள்ளது.
அவர் குறித்து யாருக்கேனும் தகவல் தெரிந்தால் தங்களிடம் கூறலாம் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.