பிரான்ஸ் தேர்தலின் இரண்டாம் சுற்று... ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் ராஜினாமா செய்யலாம்
பிரான்ஸ் இதுவரை எதிர்கொண்டிராத, மக்களை பிளவுப்படுத்தும் பொதுத் தேர்தலின் இரண்டாம் சுற்று வாக்கெடுப்பு முன்னேறும் நிலையில், ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் பதவி விலகும் நெருக்கடி உருவாகும் என்றே கூறப்படுகிறது.
மேக்ரான் பதவி விலகும் நெருக்கடி
கடந்த ஞாயிறன்று முதல் சுற்று வாக்கெடுப்பு நடந்து முடிந்த நிலையில், ஒரு வாரகாலமாக நாடு முழுவதும் கூச்சல், குழப்பம், வன்முறை சம்பவங்களே அதிகரித்து காணப்படுகிறது.
ஜூலை 7ம் திகதி இரண்டாம் சுற்று வாக்கெடுப்பு நடந்து வருகிறது. கடந்த சுற்று போன்றே தீவிர வலதுசாரிகளின் ஆதிக்கம் தொடரும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இதன் எதிரொலியாக ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் பதவி விலகும் நெருக்கடியும் ஏற்படால் என்று அஞ்சப்படுகிறது.
கடந்த ஒரு வாரத்தில் மட்டும் பிரான்ஸ் தெருக்களில் பல ஆயிரக்கணக்கான கலவரத் தடுப்பு பொலிசார் களமிறக்கப்பட்டனர். கடந்த 7 நாட்களில் மட்டும் தேர்தல் வேட்பாளர்கள் அரசியல் ஆர்வலர்கள் என பலர் 51 தாக்குதல் சம்பவங்களில் காயமடைந்துள்ளனர்.
மட்டுமின்றி சமூக செயற்பாட்டாளரும் தேசிய சட்டமன்றத்தின் முதன்மை அதிகாரியுமான Virginie Lanlo என்பவரின் தாடை உடைந்த சம்பவமும் கடந்த வாரம் நடந்துள்ளது.
National Rally கட்சி ஆதிக்கம்
தற்போது இரண்டாவது சுற்று நடந்து வருவதால், பாரிஸில் உள்ள டசின் கணக்கான கடைகள் மூடப்பட்ட நிலையில் காணப்படுகின்றன. இதனிடையே, இன்றைய வாக்குப்பதிவில் Marine Le Pen முன்னெடுக்கும் தீவிர வலதுசாரிகள் பெரும் ஆதிக்கம் செலுத்த நேர்ந்தால், இமானுவல் மேக்ரான் நாளையே பதவியை துறக்கலாம் என்றும் நாடாளுமன்றத்தின் முதன்மை அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
இன்னும் 3 ஆண்டுகள் ஜனாதிபதி பதவியில் நீடிக்க இருக்கும் இமானுவல் மேக்ரான் கடந்த மே மாதம் திடீரென்று நாடாளுமன்றத்திற்கான தேர்தலை அறிவித்தார். ஆனால் தொடக்கத்தில் வெளியான கருத்துக்கணிப்புகள் அனைத்தும் அறுதிப் பெரும்பான்மை எவருக்கும் வாய்ப்பில்லை என்றே வெளியானது.
தற்போது தேர்தலின் முதல் சுற்றில் தீவிர வலதுசாரிகளான National Rally கட்சி ஆதிக்கம் செலுத்த, இரண்டாவது சுற்றிலும் அதே நிலை நீடிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |