இந்தியாவின் இரண்டாவது பெரும் கோடீஸ்வரர்.. கெளதம் அதானி வாங்கும் சம்பளம் எவ்வளவு
இந்தியாவின் இரண்டாவது பெரும் கோடீஸ்வரரான கெளதம் அதானி வாங்கும் சம்பளமும், அவரது நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளின் சம்பளமும் வெளியாகியுள்ளது.
மொத்தம் ரூ 9.26 கோடி
அதானி குழுமத்தில் 10 நிறுவனங்கள் பட்டியலிடப்பட்டுள்ள நிலையில், அதில் இரண்டு நிறுவனங்களில் இருந்து மட்டுமே கெளதம் அதானி சம்பளம் பெறுகிறார். இந்தியாவின் இரண்டாவது பெரும் கோடீஸ்வரர் என அறியப்படும் கெளதம் அதானி 2024ல் சம்பளமாக மொத்தம் ரூ 9.26 கோடி கைப்பற்றுகிறார்.
இது அவரது நிறுவனங்களில் தலைமை நிர்வாக அதிகாரிகளாக செயல்படுவோர் பெறுவதைவிடவும் மிகவும் குறைவு. அதானி குழுமத்தில் பட்டியலிடப்பட்டுள்ள 10 நிறுவனங்களின் ஆண்டறிக்கை வெளியாகியுள்ளது.
இதில் இரண்டு நிறுவனங்களில் இருந்து மட்டுமே அதானி சம்பளம் பெறுகிறார். 2024 நிதியாண்டில் Adani Enterprises நிறுவனத்தில் இருந்து சம்பளமாக ரூ 2.46 கோடி சம்பளமாக பெறுகிறார். 2023ல் இதே நிறுவனத்தில் இருந்து ரூ 2.39 கோடி சம்பளமாகப் பெற்றிருந்தார்.
Adani Ports & SEZ நிறுவனத்தில் இருந்து மட்டும் 2023ல் ரூ 1.8 கோடியாக இருந்துள்ளது. இது போக இதர சலுகைகளுடன் 2024ல் கெளதம் அதானியின் சம்பளம் ரூ 9.26 கோடி என்றே தெரிய வந்துள்ளது.
ஆனால் அவரது மகன் கரன் அதானியின் சம்பளம் ரூ 3.9 கோடியில் இருந்து 2024ல் ரூ 6.8 கோடியாக அதிகரித்துள்ளது. Adani Natural Resources நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான வினய் பிரகாஷ் 2024ல் ரூ 89.37 கோடி சம்பளம் பெறுகிறார்.
அதானி குழுமத்தின் கீழ் NDTV
Adani Green Energy நிறுவன தலைமை நிர்வாக அதிகாரியான வினீத் எஸ். ஜெயின் ரூ 15.25 கோடி சம்பளம் பெறுகிறார். சாகர் அதானி ரூ 4.40 கோடி சம்பளம் பெறுகிறார். Adani Power நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரான கைலியா 2024ல் ரூ 5.63 கோடி சம்பளமாக பெறுகிறார்.
Adani Wilmar நிறுவனத்தின் Angshu Mallick ரூ 5.15 கோடி சம்பளம் பெறுகிறார். Ambuja Cements நிறுவனத்தின் Neeraj Akhoury கடந்த ஆண்டு சம்பளமாக ரூ 22.47 கோடி பெற்றுள்ளார்.
ஆனால் அதானி குழுமத்தின் கீழ் Ambuja Cements நிறுவனம் செயல்படத் தொடங்கியதன் பின்னர் Ajay Kapur தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.
அவருக்கு ரூ 9.34 கோடி சம்பளமாக வழங்கப்படுகிறது. அதானி குழுமத்தின் கீழ் NDTV நிறுவனத்தில் செந்தில் செங்கல்வராயன் ரூ 2.39 கோடி சம்பளமாக பெறுகிறார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |